செய்திகள்

பணகுடி அருகே 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை

பணகுடி, ஜன. 8– பணகுடி அருகே 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன் (வயது 15). இவன் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரி ராஜன்(23). இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் உறவினர்கள் போலவே எப்போதும் சகஜமாக பழகி வந்துள்ளனர். […]

Loading

செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் – ரொக்கம்

ரேஷன் கடையில் ஸ்டாலின் வழங்கி துவக்கி வைத்தார் சேலை, வேட்டியும் வழங்கினார் சென்னை, ஜன.8– பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3 ஆயிரம் – ரொக்கம் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள், 1 கோடியே 77 […]

Loading

செய்திகள்

மரத்தில் கார் மோதல்: 4 கல்லூரி மாணவர்கள் பலி

தெலுங்கானாவில் இன்று அதிகாலை ரங்கா ரெட்டி, ஜன. 8– கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலியானார்கள். தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மோகிலா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் சூர்ய தேஜா, சுமித், ஸ்ரீநிகில், ரோகித், மாணவி நட்சத்திரா. இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை மோகிலாவிலிருந்து ஐதராபாத்திற்கு காரில் புறப்பட்டு சென்றனர். மிர்ஜ குடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் […]

Loading

செய்திகள்

பழிக்குப்பழி: கோவையில் ஜாமீனில் வெளிவந்தவர் அடித்துக் கொலை

4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை கோவை, ஜன. 8– கோவையில் பழிக்குப் பழியாக ஜாமீனில் வெளிவந்தவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஜப்பான் என்று அழைக்கப்படும் பிரவீன் குமார் (வயது 24). கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில காலமாக மைசூரில் உள்ள தென்னை நார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 7.30 மணி அளவில் கோவை வந்து இருந்த பிரவீன் குமார், தனது […]

Loading

செய்திகள்

ஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகளுக்கும் 500% வரி : இந்தியாவுக்கு புதிய சிக்கல்

மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் வாஷிங்டன், ஜன. 8– ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இது, இந்தியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும். இதற்கிடையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரமே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் […]

Loading

செய்திகள்

பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது

சென்னை, ஜன.8- பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை. பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் தங்கள் போராட்டத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்தது […]

Loading

செய்திகள்

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இல்லை – காரணம் என்ன? தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம்

சென்னை:நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தணிக்கைச் சான்றிதழ் தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், “தணிக்கை குழு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்படுவதால் தயாரிப்பாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறோம். தற்போது பான் இந்தியா படங்களை அனைத்து மொழிகளிலும் ஒரே […]

Loading

செய்திகள்

மெட்ரோ ரெயில் பயண அட்டை தொலைந்தால் இருப்புத் தொகையை மாற்ற இயலாது: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை, ஜன. 8– சென்னை மெட்ரோ ரெயில் பயண அட்டை தொலைந்து போனால் அதில் உள்ள இருப்புத் தொகையை வேறு பயண அட்டைக்கு மாற்ற இயலாது என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை மற்றும் சிங்கார சென்னை அட்டைகள் மெட்ரோ பயணம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தொலைந்துபோன மெட்ரோ இரயில் பயண அட்டைகள் மற்றும் சிங்கார சென்னை அட்டைகளில் மீதமுள்ள தொகையை […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 38 ஆயிரம் சிறப்பு பஸ்கள்:

அமைச்சர் சிவசங்கர் தகவல் சென்னை, ஜன.7- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 38 ஆயிரத்து 175 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

முகலாய சாம்ராஜ்யத்தின் முடிவு

1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு, அதாவது முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு, கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் ஷா ஜாபர் மீதான வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை டெல்லி செங்கோட்டையில் இந்நாளில் தொடங்கியது. 82 வயதான பேரரசர் மீது தேசத்துரோகம், சதித்திட்டம் மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ரங்கூனுக்கு (பர்மா) நாடு கடத்தப்பட்டார். இந்த […]

Loading