செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

சென்னை, ஜன. 10: பெருங்குடி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2024ம் ஆண்டு, பெருங்குடி பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 44 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படையினர்

இஸ்லாமாபாத், ஜன. 10: பாகிஸ்தானில், 11 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் கடந்த 8–ந்தேதி பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில், தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் எனும் அமைப்பைச் சேர்ந்த 6 பயங்கரவாதிகள் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

ஆவி எஞ்சின் ரயில்கள் மெட்ரோ அவதாரமானது!

1863–ம் ஆண்டு ஜனவரி 10 அன்று, லண்டனில் மெட்ரோ பாலிட்டன் ரயில்வே தொடங்கப்பட்டது. இதுவே உலகின் முதல் அடித்தள ரயில் (Underground Railway). நகரங்களின் போக்குவரத்து முறையை முழுமையாக மாற்றிய இந்த முயற்சி, ரயில் பயணத்தின் புதிய யுகத்திற்குத் துவக்கமாக அமைந்தது. ரயில்களின் வரலாறு ஆரம்பத்தில் ஆவி இயந்திரம் (Steam Engine) அடிப்படையிலான இழுவை ரயில்களால் தொடங்கியது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு ஓடிய இந்த ரயில்கள், தொழில்துறை புரட்சிக்காலத்தில் மக்களையும் சரக்குகளையும் வேகமாக நகர்த்த உதவின. காலப்போக்கில் […]

Loading

செய்திகள்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூர் அணி திரீல் வெற்றி

மும்பை, ஜன. 10: மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணியை கடைசி பந்தில் வீழ்த்தி பெங்களூர் அணி திரீல் வெற்றியை பதிவு செய்தது. மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் […]

Loading

செய்திகள்

வனப்பாதுகாப்பு, காலநிலை தாங்குதிறனை வலுப்படுத்த 100 புதிய காப்பு வனங்கள்: அரசு அறிவிப்பு

சென்னை, ஜன. 10: தமிழ்நாடு அரசு 100 புதிய காப்பு வனங்களை அறிவித்து, வனப் பாதுகாப்பு மற்றும் காலநிலை தாங்குதிறனை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் தேசிய வனக் கொள்கை (1988), நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நாட்டின் புவியியல் பரப்பளவில் 33 சதவீதத்தை வனங்கள் மற்றும் பசுமை பரப்பின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு இந்த தேசிய இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக முன்னேறி வருவதுடன், தற்போது 24.47 சதவீத வனங்கள் மற்றும் பசுமைப்பரப்பைக் கொண்டு […]

Loading

செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை வேளாண்மை மண்டல மாநாடு

சிதம்பரம், ஜன. 10: அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தின் இயற்கை மற்றும் வளம்குன்றா வேளாண் மையம் மற்றும் பெங்களூருவில் உள்ள மண்டல அங்கக மற்றும் இயற்கை வேளாண் மையம் ஆகியவை இணைந்து, “இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை” குறித்த மண்டல மாநாடு நடைபெற்றது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் வேளாண் ஆர்வலர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். விழாவின் தொடக்கத்தில், இயற்கை மற்றும் வளம்குன்றா வேளாண் மையத்தின் இயக்குனர் ஆர். ராமன் […]

Loading

செய்திகள்

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ந் தேதி ஆரம்பம்

புதுடெல்லி, ஜன. 10: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 28-ந் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுவது வழக்கம். 2 கட்டங்களாக நடைபெறும் இந்த தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடருக்கான கால அட்டவணையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி இறுதி செய்துள்ளது. அதன்படி வருகிற 28-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய நாளில் […]

Loading

செய்திகள்

“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைபேசி இணைப்பு: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜன. 10: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் […]

Loading

சினிமா செய்திகள்

ஈழத்து வலியில் கிட்டுவின் ‘சல்லியர்கள்’ சினிமா: உயிரோட்ட நடிப்பில் காமெடி கருணாஸ், ‘ரீல்ஸ்’ சத்யாதேவி!

‘இன்ஸ்டாகிராமில்’ ரீல்ஸ் போட்ட சத்யா தேவி, சமூக ஊடகத்திலிருந்து வெள்ளித்திரைக்குள் ஊடுருவி இருக்கிறார். படம்:“சல்லியர்கள்”. அறிமுகம். புது முகமா… சத்தியம் பண்ணினாலும் நம்பவே மறுப்பார்கள். நின்றால்… நடந்தால்… ஆண் டாக்டரின் கேள்விக்கு பதில் தந்தால் … சட்டென்று திரும்பிப் பார்க்கும் அந்தப் பார்வையில்- புகுந்து நம் இதயத்தில் உறைகிறார். (இதயத்தை கனமாக்கும் கதையில், உறக்கத்தை கெடுக்கிறார் என்னமாய் நடிப்பு…?!) சல்லியர்கள்: ஈழ வரலாற்றில் தைரியம் இரக்கம், நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்த போராளி மருத்துவர்கள். அவர்களுக்கு வீர வணக்கத்துடன் நடிகர் […]

Loading

செய்திகள்

சென்சார் போர்டு – ‘மத்திய அரசின் புதிய ஆயுதம்’: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 10: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று வெளியாகும் என்று பட தயாரிப்பு நிறுவனம் முதலில் அறிவித்திருந்தது. இந்த திரைப்படத்தை வரவேற்க அவரது ரசிகர்களும், த.வெ.க.வினரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் மத்திய அரசின் திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) இந்த படத்துக்கு சான்றிதழை வழங்காததால் […]

Loading