செய்திகள்

நெமிலி ஊராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் சந்திரகலா ஆய்வு

ராணிப்பேட்டை, ஜன. 11: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தார். இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெடும்புலி ஊராட்சியில் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் 3 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்த கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 6 வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு […]

Loading

செய்திகள்

கார் ஓட்டினார் ஸ்டாலின்

சென்னை, ஜன. 10: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வழக்கமான காலை நடைபயிற்சிக்கு பிறகு விண்டேஜ் காரை ஓட்டி மகிழ்ந்துள்ளார். இதனை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில் டி.ஆர்.பி.ராஜா கூறியிருப்பதாவது; ”நமது அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர். குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் […]

Loading

செய்திகள்

20-ந்தேதி முதல் தொடர் போராட்டம்: அரசு டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஜன. 10: எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால் 20–ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து […]

Loading

செய்திகள்

ஏரியில் மூழ்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, ஜன. 10– ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ‘‘கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கிழக்கு மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னியாசி என்பவரின் மகன் சுரேஷ் (வயது 43) என்பவர் நேற்று முன்தினம் (8–ந் தேதி) மாலை 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக மேற்படி கிராம ஏரியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த […]

Loading

செய்திகள்

போரை நிறுத்தியதால் எனக்கு நோபல் பரிசு வேண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பேச்சு

வாஷிங்டன், ஜன. 10: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாகவும், தன்னை விட அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியானவர் யாருமில்லை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். வெனிசுவேலா நாட்டில் உள்ள எண்ணெய் வளங்கள் குறித்து எண்ணெய் மற்றும் வாயு நிறுவன அதிகாரிகளுடன், டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினார். .அப்போது பேசிய அதிபர் டிரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதற்காக ஒன்றுமே […]

Loading

செய்திகள்

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

சென்னை, ஜன. 10: தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஒரு சில மணி நேரமாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் இலங்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னைக்கு 490 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும், காரைக்காலில் இருந்து 310 கி.மீ. தொலைவில் தென்கிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. மேற்கு வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து […]

Loading

செய்திகள்

பொங்கல்: அரசுப் பேருந்துகளில் 1.21 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 10: வரும் 15ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அரசுப் பேருந்துகள் மூலம் சுமார் 1.21 லட்சம் பேர் நேற்று சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. நேற்று ஒட்டுமொத்தமாக இயக்கப்பட்ட 2,706 பேருந்துகளில் 1,21,770 பேர் சென்னையிலிருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 614 […]

Loading

செய்திகள்

மறைமலை நகர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து: அண்ணா தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்

தாம்பரம், ஜன. 10: மறைமலைநகர் நகராட்சி அவலங்களை கண்டுகொள்ளாத தி.மு.க. அரசை கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மறைமலைநகர் நகர கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நகர கழக செயலாளர் எம்.ஜி.கே. கோபிகண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் பா.பென்ஜமின் தலைமை வகித்தார். செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் […]

Loading

செய்திகள்

16-வது நாளாக தொடரும் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை, ஜன. 9: 16-வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் சாலை அமர்ந்து போராட்டம் நடத்தியதால் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டத்தை தொடங்கிய அவர்கள், பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என […]

Loading

செய்திகள்

செட் வேகத்தில் உயர்ந்த மல்லிகை பூ விலை: கிலோ ரூ. 10 ஆயிரத்திற்கு விற்பனை

சென்னை, ஜன. 10: திண்டுக்கல் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை பூ உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால், நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் மல்லிகைப்பூவின் விலை கிலோ ரூ.10,000 தாண்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு பகுதியில் ஐ.எஸ்.ஓ தர சான்று கொண்ட மதுரை மல்லிகை பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் அதிகாலை பனிப்பொழிவு காரணமாக […]

Loading