செய்திகள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்வு

சென்னை, ஜன. 11: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் 3 மடங்கு உயர்ந்தள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்பட பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள், திருமண சீசன் போன்ற விழா காலங்களில் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், ரெயில்களில் பயணம் செய்வதற்கு ‘டிக்கெட்’ கிடைத்துவிட்டால், ஏதோ சாதித்தது போன்ற உணர்வு பயணிகள் மனதில் வெளிப்படுகிறது. ஏனென்றால் பண்டிகை, விழா காலங்களின்போது சொந்த ஊருக்கு சென்று உற்றார்-உறவினர்கள், நண்பர்களை சந்தித்து, மகிழ்ச்சியாக […]

Loading

செய்திகள்

பாம்பன் அருகே படகிலிருந்து கடலில் விழுந்த 2 மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரம், ஜன. 11: பாம்பன் அருகே பலத்த காற்று வீசியதால் படகிலிருந்து கடலில் விழுந்த தூத்துக்குடி மீனவர் உள்பட 2 பேர் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் இருந்து நம்புச்சாமி என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகு ஒன்றில் சரத்குமார் (வயது 28), டைசன் (32), ரீகன், டோனி, வெள்ளைச்சாமி ஆகிய 5 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தனுஷ்கோடி […]

Loading

செய்திகள்

சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் 4-வது நாளாக போராட்டம்

சென்னை, ஜன. 11– பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் இன்று 4வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் தங்கள் நெற்றியில் ‘181′ என எழுதியும், வில்லுபாட்டு பாடியபடியும் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என நூதன முறையில் போராட்டம் நடத்தினர். […]

Loading

செய்திகள்

டெல்லியில் மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி, ஜன. 11: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.18,500 கோடியை உடனே ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. பா.ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு பட்ஜெட் தேதியை மாற்றி அமைத்ததன்படி அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் […]

Loading

செய்திகள்

போரூர் – வடபழனி இடையே இன்று மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, ஜன. 11: போரூர்- – வடபழனி இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. 2ஆம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் […]

Loading

செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை விண்ணில் சீறிப்பாய்கிறது

சென்னை, ஜன. 11: பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது. மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்’ என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய […]

Loading

Uncategorized

17வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சென்னை, ஜன. 11: சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர்ந்து 17-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ் டிஏ) சார்பில், கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து நேற்று 16-வது நாளாக சென்னை எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். அங்கு வருவதற்காக […]

Loading

செய்திகள்

ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம்: 116 பேர் பலி

வாஷிங்டன், ஜன. 11: ஈரானில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 116 பேர் பலியாகி இருக்க கூடும் என மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. கமேனியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக உள்ளது” என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே […]

Loading

செய்திகள்

கரூர் சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராகிறார் விஜய்

சென்னை, ஜன. 11: கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவகத்தில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளது. இதைத் தொடரந்து டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குமாறு டெல்லி காவல்துறைக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் […]

Loading

செய்திகள்

கடலூரில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம்: கலெக்டர் சிபி ஆதித்யா திறந்து வைத்தார்

கடலூர், ஜன. 11– கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், “அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக்கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் […]

Loading