செய்திகள்

மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு ‘நீட்’ மறுதேர்வு

இந்தூர், ஜூலை.2- நீட் தேர்வின்போது மின்தடையால் பாதிக்கப்பட்ட 75 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த மத்திய பிரதேச ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மே 4ந் தேதி நாடு முழுவதும் நடந்தது. லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதினர். அதன்தேர்வு முடிவுகளும் வெளியாகி விட்டன. இதற்கிடையே மத்தியபிரதேச மாநிலம் இந்தூர், உஜ்ஜயின் உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நீட் தேர்வு எழுதிய சில மாணவர்கள், மத்திய பிரதேச ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் வழக்கு […]

Loading

செய்திகள்

5 நாடுகளு“ வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி

புதுடெல்லி, 2 ரதமர் மோடி இன்று முதல் 9ந்தேதி வரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், பிரதமரின் இந்த நீண்டகால பயணம் அமைகிறது. இதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு செல்கிறார்.இந்த பயணத்தில் […]

Loading

செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய 30 ஆண்டு தலைமறை குற்றவாளிகள் கைது

சென்னை, ஜூலை 2-– இந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பைப் குண்டு’ வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். கடந்த 1995-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு, நாகூரில் தங்கம் முத்துகிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு, 1999-ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், […]

Loading

செய்திகள்

இந்தியாவுடன் எல்லை நிர்ணயம் குறித்து விவாதிக்கத் தயார்: சீனா அறிவிப்பு

பெய்ஜிங், ஜூலை 1– இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து விவாதங்களில் ஈடுபட்டு எல்லையில் அமைதியை நிலைநிறுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் துறைமுக நகரான கிங்டாவோவில் கடந்த 26ம் தேதி நடைபெற்றது. மாநாட்டுக்கிடையே, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன்னை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எல்லைகளை நிர்ணயிப்பது உள்ளிட்ட சிக்கலான பிரச்சினைகளை […]

Loading

செய்திகள்

ஆனித்திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம், ஜூலை 1 சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிதம்பரத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. விழாவின் 9ம் நாளான இன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு சிற்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பரிசளிப்பு விழா…! – விழா 11 ராஜா செல்லமுத்து

உயர்ந்து வளர்ந்த அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அது அந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவைப் போலவே இருக்கும்.வருடம் முழுவதும் ஓடியாடி வேலை செய்த ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அந்த விழாவில் நிறுவனத்தில் திறமையாகப் பணிபுரிபவர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள். வெளியில் இருந்து நிறுவனத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் என்று அத்தனை பேரையும் தேர்வு செய்து பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை […]

Loading