சென்னை, ஜூலை 2– திருப்புவனத்தில் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் மரணம் அடைந்த அஜித்குமார் சகோதரருக்கு பணி நியமன ஆணையினையும் அக்குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் நேரில் சென்று வழங்கினார். முதலமைச்சர் […]
![]()










