செய்திகள்

சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை போலீசிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளரின் நேர்மை: லலிதா ஜுவல்லரி அதிபர் எம். கிரண் குமார் பாராட்டு

சென்னை, ஜன. 17– நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி அதிபர் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தார். அதற்காக லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் டாக்டர் எம். கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார். “இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை,” என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக […]

Loading

செய்திகள்

பொங்கல் பரிசாக விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழகமுதலமைச்சர் ஸ்டாலின். வடகிழக்குப் பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டநிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும்வகையில், ரூபாய் 111.96 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 33%-க்கு மேல் பயிர்சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின்அறிவித்தார். பாதிக்கப்பட்ட 1.39 லட்சம் ஏக்கர் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு 84,848 விவசாயிகள்பயன் பெறும் வகையில் நிவாரணத் தொகையாக ரூ 111.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025-2026 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில்பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண்மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின்வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 01.12.25 அன்று ஆய்வு கூட்டம்நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் கணக்கெடுப்பு நெல் பணி உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாகஹெக்டேருக்கு ரூ. 20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில்மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டிட்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால்பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணைஇன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும்2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தவேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 லட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில்ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அஉத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில்நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

Loading

செய்திகள்

சென்னையில் பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசார் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாகவும், பாதுகாக்கவும் கொண்டாட கமிஷனர் அருண் சிறப்பு நடவடிக்கை

சென்னை, ஜன. 13– பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டுவதற்காக சென்னை காவல்துறை கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 17–ந் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக கமிஷனர் ஆ.அருண் உத்தரவின் […]

Loading

செய்திகள்

விருப்பத்துக்கு ஏற்ப பேருந்துகளில் பயணம் செய்யும் ‘சென்னை உலா’: அமைச்சர் சிவசங்கர் துவக்கினார்

சென்னை, ஜன. 14– போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் – “சென்னை உலா” – விருப்பத்திற்கேற்ப பயணிக்கும் சிறப்பு சுற்றுவட்ட பாரம்பரியப் பேருந்து இயக்கத்தை, இன்று சென்னை அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். அதோடு பேருந்தில் பயணம் மேற்கொண்டார். “சென்னை உலா” பேருந்து – “ஹாப் -ஆன் ஹாப் -ஆஃப்” சேவைகளுடன், முதன்முதலில் 5 பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. மேலும், அவை சென்னையின் மையப்பகுதியில் உள்ள சின்னமான மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் […]

Loading

செய்திகள்

பொங்கல் விடுமுறை: மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்

சென்னை, ஜன. 14– பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்: சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி […]

Loading

செய்திகள்

கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து வரத்து அதிகரித்தது கோயம்பேட்டில் பொங்கல் விற்பனை களைகட்டியது

சென்னை, ஜன. 14– கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு உட்பட உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நாளை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதியாக ஆண்டுதோறும் கோயம்பேடு சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் […]

Loading

செய்திகள்

டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா: மோடி பங்கேற்பு

புதுடெல்லி, ஜன.14– டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார். பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் […]

Loading

செய்திகள்

பொங்கல் விடுமுறை: சிறப்புப் பஸ்களில் 6.90 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 14– பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.90 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..இதன்படி, ஜன. 9 ஆம் தேதி முதல் ஜன. 13–ம் தேதி வரை நள்ளிரவு நேரம் வரை, மொத்தம் 15,762 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.90 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். […]

Loading

செய்திகள்

தாய்லாந்தில் ரெயில் மீது ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 22 பேர் பலி

பாங்காக், ஜன. 14– தாய்லாந்தில் ரயில் மீது ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று காலை ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த ரெயில், பாங்காக்கில் இருந்து 230 கி.மீ. தொலைவில் நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேக ரயில் திட்டப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன், ராட்சதானி […]

Loading

செய்திகள்

வெள்ளி விலை வரலாறு காணாத உச்சம்: ஒரே நாளில் ரூ. 15,000 உயர்ந்து கிலோ ரூ. 3 லட்சத்தைக் கடந்தது

சென்னை, ஜன. 14– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத உச்சமாக கிலோவுக்கு ரூ15,000 உயர்ந்து முதல்முறையாக ரூ. 3 லட்சத்தைக் கடந்தது. தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை […]

Loading