செய்திகள்

பிரதமர் மோடியுடன், எடப்பாடி சந்திப்பு: ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம்

சென்னை, ஜூலை.24- பிரதமர் மோடியுடன், எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தெரிகிறது. எனவே அவர், தனது ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார். பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26ந் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு திருச்சி செல்கிறார். […]

Loading

செய்திகள்

சேலத்தில் நடந்த ரவுடி கொலையில் தூத்துக்குடியை சேர்ந்த 7 பேர் கைது

சேலம், ஜூலை 24– சேலத்தில் ரவுடி மதன்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த மேலும் 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி மதன்குமார் (வயது 28), உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் மீது தூத்துக்குடியில் இரட்டைக் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த ஏப்ரல் மாதம் […]

Loading

செய்திகள்

செஸ் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி: இந்திய வீராங்கனை திவ்யா அசத்தல் வெற்றி

தாஷ்கண்ட், ஜூலை 24– உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் செஸ் உலகக்கோப்பை மகளிர் பிரிவின் அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை திவ்யா தேஸ்முக் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார் 2025 பைட் (FIDE) மகளிர் உலகக் கோப்பை தொடர் தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் முன்னாள் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியை (Tan Zhongyi) வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். […]

Loading

செய்திகள்

சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்:” நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு

சென்னை, ஜூலை 23– தனது சொந்த வீட்டிலேயே தனக்குத் துன்புறுத்தல் நடப்பதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்து வரும் தனுஸ்ரீ தத்தா தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது சொந்த வீட்டிலேயே தனக்குத் […]

Loading

செய்திகள்

பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதி நவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணி நிறைவு

சென்னை, ஜூலை 23– சென்னை தி.நகர் பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையான அதிநவீன ‘மெட்ரோ’ சுரங்க ரெயில் பணியின் ஒரு வழி சாலை பணி இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பனகல் பார்க் முதல் கோடம்பாக்கம் வரையிலான சுமார் 2.1 கி.மீ. தூரத்திற்கான சுரங்கப்பாதை பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது வழித்தடம் 4 களங்கரைவிளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை (Lighthouse – Poonamallee […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்திய நடுத்தர வர்க்கத்தின் கிரிப்டோ கனவு: பாதுகாப்பு & ஒழுங்குமுறையின் அவசியம்!

இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் இதயத்தில் ஒரு கனவு உள்ளது – அது நிதி சுதந்திரம் பற்றிய கனவு, வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பைக் கண்டுபிடிப்பது. பலருக்கு, கிரிப்டோகரன்சி அந்தக் கனவாகத் தெரிகிறது. இது டிஜிட்டல் வடிவிலான சொத்து என்பதுடன் பலருக்கும் உற்சாகம் தருவதாக உள்ளது. மேலும் மிக முக்கியமாக, எந்த வங்கியும் அல்லது நிலையான வைப்புநிதியும் கொடுக்க முடியாத வருமானத்தை இது உறுதியளிக்கிறது. ஆனால் ஒவ்வொரு பளபளப்பான நாணயத்திற்கும் ஒரு மறுபக்கம் […]

Loading

செய்திகள்

கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக்கொண்டு இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

கும்பகோணம், ஜூலை.22- காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்ணுக்கு தெரியவில்லை. கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக் கொண்டு இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தனது பிரச்சாரத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். பிரசார பஸ்சில் நின்றபடி அவர் பேசியதாவது:- தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் முடங்கியது

புதுடெல்லி, ஜூலை 22– எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் 2வது நாளாக நாடாளுமன்ற முடங்கியது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்றிரவு மருத்துவக் […]

Loading

செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை

மதுரை, ஜூலை 22– அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை இன்று விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய […]

Loading

செய்திகள்

நுங்கம்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள்: 4 ஐ.டி. ஊழியர்கள் உள்பட 7 பேர் கைது

சென்னை, ஜூலை 22– நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 4 ஐ.டி. ஊழியர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகர காவல், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் […]

Loading