செய்திகள்

சென்னையில் ஓய்வூதியதாரர்களின் குறைகளை களைய குறைதீர் நாள் கூட்டம்

சென்னை, ஆக. 6– சென்னையில் ஓய்வூதியதாரர்களின் குறைகளை களை குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 25–ந்தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மிசித்தார்த்ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் 12.9.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட […]

Loading

செய்திகள்

எஜுகேஷன் யுஎஸ்ஏ சார்பில் 9 ந்தேதி சென்னை ஹில்டன் ஓட்டலில் அமெரிக்க கல்விக் கண்காட்சி

சென்னை, ஆகஸ்ட் 5: அமெரிக்க உயர்கல்வி குறித்த அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான‌ எஜுகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA), ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் தொடங்கி ஆகஸ்ட் 17ம் தேதி புனேவில் நிறைவடையும் வகையில் நாடு தழுவிய எட்டு அமெரிக்க கல்வி கண்காட்சிகளை நடத்தும். ஐம்பதுக்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்கும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளைச் சந்திக்க ஒரு தனித்துவமான வாய்ப்பை இக்கண்காட்சி வழங்குகிறது. பின்வரும் […]

Loading

செய்திகள்

கடன் பிரச்சனையில் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை: விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல், ஆக. 5– நாமகிரிப்பேட்டை அருகே கடன் பிரச்சனையால் தனது மூன்று மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன்பட்டி அடுத்துள்ள வேம்பாகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் ரிக் வண்டி மேனேஜராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாரதி (26) இவர்களுக்கு பிரதிக்ஷா ஸ்ரீ (10), ரித்திகா ஸ்ரீ (7), […]

Loading

செய்திகள்

‘ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் சிறுபிள்ளைத்தனமான பேச்சு: பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி, ஆக. 5– ‘ஆபரேஷன் சிந்தூர் பற்றி ராகுல் காந்தி சிறுபிள்ளைத்தனமான பேசியுள்ளார். உச்சநீதிமன்றம் கூட அவரைக் கண்டித்துள்ளது’ என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில், ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், […]

Loading

செய்திகள்

இன்று தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்வு: மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, ஆக. 5 சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயித்து வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஜூலை 23ம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அன்று […]

Loading

செய்திகள்

தண்ணீர் இல்லாததால் கிராமத்தை விட்டு வெளியேறிய 5000 பேர்: ஒருவர் மட்டும் வசிக்கும் அவலம்

சென்னை, ஆக. 5– 5000 பேர் வசித்த நாட்டாக்குடி கிராமத்தில் குடிநீர் பிரச்னை காரணமாக, தற்போது அங்கு ஒருவர் மட்டும் எஞ்சியிருப்பதாக தமிழக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது; ஒரு காலத்தில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாக்குடி கிராமம் இப்போது ஒரு பேய் கிராமமாக மாறிவிட்டது. அங்கு ஒரே ஒரு ஆன்மா மட்டுமே எஞ்சியுள்ளது. முதல்வர் […]

Loading

செய்திகள்

நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்: சுற்றுலாத் தலங்கள் மூடல்

ஊட்டி, ஆக. 5– நீலகிரி மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று ஒருநாள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … சிலை திறப்பு விழா ….! விழா 29 … ராஜா செல்லமுத்து

பதினைந்து அடி உயரம்.. மூன்று அடி அகலத்தில் சிலை செய்தாயிற்று. மேல்பூச்சு, கீழ் பூச்சு வேலைகள் முடிந்து சிலையை நிறுவுவதற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தன. ‘சிலையை எப்படிக் கொண்டு வரலாம்?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார், கிருஷ்ணன். ” பெரிய லாரி வச்சுக் கொண்டு வந்திரலாமா? ” என்று கிருஷ்ணனின் நண்பன் குணா கேட்க “லாரியில வச்சுக் கொண்டு வந்தா ஏதாவது டேமேஜ் ஆயிருமே? அப்புறம் இவ்வளவு செலவு பண்ணுனது வேஸ்ட் ஆயிரும். கொஞ்சங்கூட கீறல் […]

Loading

செய்திகள்

பூந்தமல்லி அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

ஆவடி, ஆக. 5– பூந்தமல்லி அருகே 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெங்களூர் ஆசாமியை கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் “போதையில்லா தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி, அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையாளர் கி.சங்கர் உத்தரவுப்படியும், காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி வழிக்காட்டுதலின் படியும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் அறிவுறுத்தலின் படி தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி பைபாஸ் […]

Loading

செய்திகள்

ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: 15 பயணிகள் படுகாயம்

ஆம்பூர், ஆக. 5– ஆம்பூர் அருகே இன்று காலை ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதி சென்னை -– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை விஜயவாடாவில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால பணிக்காக கொட்டப்பட்டு இருந்த மண் குவியல்கள் மீது ஏறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த […]

Loading