செய்திகள்

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: ஒருவர் கைது

சென்னை, ஆக. 7– மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அயனாவரம், சக்ரவர்த்தி நகரில் வசித்து வரும் ஐயங்கார் என்பவர், 2021ம் ஆண்டு, அவரது மகள் ஹேமாவதி என்பவர் 2வது பிரசவத்திற்கு வந்திருந்தபோது, ஹேமாவதியின் கணவருடைய உறவினரான சுபத்ரா மற்றும் அவரது கணவர் சந்துரு (எ) சந்திரசேகர் ஆகியோர் ஹேமாவதியிடம் தாங்கள் கெருகம்பாக்கத்தில் கடை நடத்தி வருவதாகவும், எங்களுக்கு தெரிந்த செல்வாக்கு மிகுந்த நபர் மூலம் […]

Loading

செய்திகள்

கருணாநிதியின் 7–ம் ஆண்டு நினைவு தினம்: ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

சென்னை, ஆக. 7– கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் […]

Loading

செய்திகள்

அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை

சென்னை, ஆக.7– அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை 6 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் நெவில் சாலமன், முத்துக்குமரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– இந்தியாவில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுவரை இங்கு 6 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சைகளும், 10 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய இடையீட்டு சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு இருதய […]

Loading

செய்திகள்

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு

சென்னை, ஆக 7– சென்னை கம்பன் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசுகிறார். சென்னை ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர் விருதை’ கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்குகிறார். பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், கம்பன் அடிசூடி பழ. பழநியப்பன், பேராசிரியர் சாரதா நம்பி […]

Loading

செய்திகள்

கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு

கோவை, ஆக. 6– கோவை காவல் நிலையத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பெரிய கடைவீதியில் பி1 காவல்நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல்நிலையத்தில் நேற்றிரவு 11 மணியளவில் ஒருவர் புகாரளிக்க வந்ததாகவும், இன்று காலையில் காவல் நிலையத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எஸ்.ஐ. அறையில் அந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் காவல் நிலையத்தில் தற்கொலை […]

Loading

செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%

சென்னை, ஆக.6– 14 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். இது வேறு எந்த பெரிய மாநிலமும் பெறாத மாபெரும் வளர்ச்சி என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2 ஆயிரத்து 538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– […]

Loading

செய்திகள்

உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க தலா ரூ.20,000 மானியம்

சென்னை, ஆக. 6– தமிழகத்தில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e–scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க இந்த மானியம் வழங்கப்படுகிறது. நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம். […]

Loading

செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

புதுடெல்லி, ஆக. 6– ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.5 சதவீதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் […]

Loading

செய்திகள்

திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொன்ற தந்தை – 2 மகன்கள்

திருப்பூர், ஆக. 6– திருப்பூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். மூன்று பேரும் நேற்று இரவு […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

சென்னை, ஆக. 6– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தை […]

Loading