செய்திகள்

மதுரை ஹோலிபேமிலி பள்ளியில் மாநகர போக்குவரத்து காவல் சார்பாக மாணவர்களுக்கு

மதுரை, ஆக.12– தமிழகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலிபேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளை பற்றிய விழிப்புணர்வினை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி வழங்கினார். இதில் […]

Loading

செய்திகள்

70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள்

சென்னை, ஆக 12– 70 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேர் பயனடையும் ‘‘தாயுமானவர் திட்டம்” தொடங்கி வைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது இந்தியாவுக்கே முன்மாதிரியான முயற்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இது குறித்து, அவர் சமூகவலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள காணொலிப்பதிவில் கூறியிருப்பதாவது:– வணக்கம்! திராவிட மாடல் […]

Loading

செய்திகள்

2 புதிய வழித்தடங்களில் மெட்ரே ரெயில் சேவை

சென்னை, ஆக. 12– சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனமானது கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரையிலான வழித்தட நீட்டிப்பு மற்றும் தாம்பரம், கிண்டி, வேளச்சேரி வழித்தட நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கலங்கரை விளக்கம் முதல் உயர்நீதிமன்றம் வரை நீடிக்கும் வகையிலான 4வது வழித்தடம் நீட்டிப்பு செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி மெரீனா கடற்கரை […]

Loading

செய்திகள்

சென்னையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, ஆக. 12– சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரெயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சாவை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் ஜம்புலிங்கம், தலைமை காவலர் பி.யுவராஜ் உள்ளிட்டோா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிஸா மாநிலம் பூரியிலிருந்து வந்த விரைவு ரெயிலில் 3 -ஆவது பெட்டியில் கேட்பாரற்று பை கிடப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்று பையைக் […]

Loading

செய்திகள்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

புதுக்கோட்டை, ஆக.11– புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 20 படுக்கை கொண்ட வார்டு எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் காவல் சரகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எச்டியு (உயர் சார்பு பிரிவு) 20 படுக்கைகள் கொண்டு செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நோயாளிகள் யாரும் இல்லை. இந்த நிலையில் ஒரு இயந்திரம் […]

Loading

செய்திகள்

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் வெளிநாடு பயணம்

சென்னை, ஆக. 11– தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5வது முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தொழில் மேம்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு பெற்று வருகிறார். இதுவரை அவர் 4 தடவை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். தற்போது […]

Loading

செய்திகள்

கேரள எம்.பி.க்கள் சென்ற ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது

சென்னை, ஆக. 11– திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவிலிருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர் ப்ரூஸ், கேரள எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டறிந்தார். […]

Loading

செய்திகள்

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: சி.பி.எஸ்.இ புதிய முடிவு

புதுடெல்லி, ஆக. 11– 2026–27ம் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை சி.பி.எஸ்.இ. அறிமுகம் செய்கிறது. மத்திய இடை நிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த முடிவு செய்து இருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்கும் வகையில், புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர்: ‘இந்தியா’ கூட்டணி முடிவு

புதுடெல்லி, ஆக.11- துணை ஜனாதிபதி தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். யாரை நிறுத்துவது என்பதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த மல்லிகார்ஜுன கார்கே முயன்று வருகிறார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி, மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் […]

Loading

செய்திகள்

5 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்

வாஷிங்டன், ஆக.11-– சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்கு 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்தனர். விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் சமீப காலமாக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அதன்படி எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஒரு குழு அனுப்பப்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆன் […]

Loading