செய்திகள்

சென்னை, திண்டுக்கல், தென்காசி உள்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை

திண்டுக்கல், ஆக. 20– திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ஆவார். மதமாற்றம் தொடர்பான மோதலில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது […]

Loading

செய்திகள்

‘ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு’’: அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன், ஆக. 20– ‘‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக’’ வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார். இதனிடையே, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை அடுத்தடுத்து சந்தித்து டிரம்ப் அமைதிப் […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை; ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஆக. 20– சென்னை மாநகராட்சி தூய்மைப்பணியை தனியாருக்கு வழங்க தடை இல்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 10-க்கும் மேற்பட்ட நாட்கள் இந்த போராட்டம் நீடித்தது. இதனிடையே நள்ளிரவில் துய்மை பணியாளர்கள் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அப்போது சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருடன் […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை .. காத்தாடித் திருவிழா..!விழா 38 …. ராஜா செல்லமுத்து

நீலவான் வெளியில் நீண்ட வால் முளைத்த விண்மீன்களாய் பறந்து கொண்டிருந்தன, வண்ண வண்ணக் காத்தாடிகள். பறக்கும் அத்தனை வண்ணங்களிலும் சுரேந்திரனின் நீல வண்ணக் காத்தாடி மட்டும் வானிலேயே நிலை கொண்டிருந்தது. “அந்த நீல நிறக் காத்தாடி தான் ரொம்ப தூரத்தில பறந்திட்டு இருக்கு. நிச்சயமா அதுதான் ஜெயிக்குமுன்னு நினைக்கிறேன்” என்று ஒரு பார்வையாளர் சொல்ல “இல்ல, அந்தச் சிவப்புக் கலர் காத்தாடியப் பாருங்க . அதுவும் ரொம்ப தூரத்தில பறந்திட்டுத் தான இருக்கு.” “இல்ல, அத விட […]

Loading

செய்திகள்

தாம்பரம் அருகே ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதி விபத்தில் மேலும் ஒருவர் பலி

சென்னை, ஆக. 18– தாம்பரம் அருகே இன்று அதிகாலை ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48). இவர், ரேபிடோ நிறுவனத்தில் ‘பைக் – டாக்சி’ ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் பால்ராஜ் தனது மோட்டார்சைக்கிளில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம், தசாவர் நாயக்கர்பட்டியைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

மதுரையிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி, ஆக. 19– கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மதுரையிலிருந்து நேற்றிரவு கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் அந்த […]

Loading

செய்திகள்

பயணிகள் விமானத்தில் தீ: 40 நிமிடங்கள் பறந்து பத்திரமாக தரையிறங்கியது.

ஏதென்ஸ், ஆக. 19– கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை 40 நிமிடங்கள் இயக்கி பத்திரமாக தரையிறக்கினர் விமானி. கிரீஸ் நாட்டின் கோர்பு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் நகருக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதில் 273 பயணிகள், 8 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில […]

Loading

செய்திகள்

கட்சிக்கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை இல்லை

சென்னை, ஆக.19- கட்சிக்கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கட்சிக்கு சிவப்பு, மஞ்சள் நிறங்களில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இது தங்களது வணிகச்சின்னம் என்றும், இந்த நிறங்களில் கொடியை பயன்படுத்த விஜய் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு

புதுடெல்லி, ஆக.19- டெல்லியில் பிரதமர் மோடியை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சந்தித்து பேசினார். அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், எஸ்பேஸ் ஆக்சியம் நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பும் ஆக்சியம்–-4 என்ற திட்டத்தை உருவாக்கியது. இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாட்டு வீரர்களுடன் சேர்ந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார். கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி விண்வெளி நிலையம் சென்ற அவர், அங்கே […]

Loading

செய்திகள்

கவர்னரை வைத்து இழிவான அரசியல் செய்யும் பா.ஜ.க.

தர்மபுரி, ஆக.17– கவர்னரை வைத்து தமிழ்நாட்டில் இழிவான அரசியல் நடத்துகிறது பா.ஜ.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தருமபுரி மாவட்டத்தில், 362 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 73 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 44 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 70 ஆயிரத்து 427 பேருக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் […]

Loading