செய்திகள்

மாதவரத்தில் போதைப் பொருள்: அண்ணன் – தம்பி உள்பட 5 பேர் கைது

சென்னை, ஆக. 23– மாதவரத்தில் போதைப் பொருள் வைத்திருந்து அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் மாதவரம் காவல் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்வு .

சென்னை, ஆக. 23– சென்​னை​யில் ஆபரண தங்​கத்​தின் விலை இன்று சவரனுக்கு ரூ.800 உயர்ந்​துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்தது. சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று ஒரு கிராம் ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கும், சவரனுக்கு ரூ.800 […]

Loading

செய்திகள்

துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தப்பட்ட சிகரெட் பறிமுதல்: 7 பேர் கைது

கோவை, ஆக. 23– துபாயிலிருந்து கோவை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட் பண்டல்களை பறிமுதல் செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் 7 பேரை கைது செய்தனர். கோவை விமான நிலையத்தில் எப்போதும் போல், சுங்கத்துறை அதிகாரிகள், உளவுத்துறை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகள் சிலரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதும். உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தினர். பல கட்ட சோதனைகளுக்கு பின்னர் அவர்கள் […]

Loading

செய்திகள்

ரீல்ஸ்’களை ‘ரியாலிட்டி’ என்று மாணவர்கள் நம்பி விடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை, ஆக.23-– ”மாணவர்கள் தாங்கள் பார்க்கும், ‘ரீல்ஸ்’களை எல்லாம், ‘ரியாலிட்டி’ என்று நம்பி விடக்கூடாது; தங்களின் ரோல் மாடலை, இன்ஸ்டாகிராமில் தேடக்கூடாது” என்று சென்னையில் நடந்த குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார். மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது’ எனவும் அவர் கூறினார். சென்னை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசை வேரோடு சாய்ப்போம்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

திருநெல்வேலி, ஆக.23-– ”சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார். தமிழக பா.ஜ.க. கட்சியின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, […]

Loading

செய்திகள்

ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை: பொதுமக்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்தினார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, ஆக. 23– பீகார் மாநிலம் ராஜ்கிரில் 29–ந் தேதி முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ள “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” யை தமிழ்நாட்டில் பொதுமக்களின் பார்வைக்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். “ஹீரோ ஆசிய ஹாக்கி கோப்பை 2025” பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7–ந் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் 8 ஆசிய நாடுகள் மோதுகின்றன, இப்போட்டியில் […]

Loading

செய்திகள்

நங்கநல்லூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் புதிய நுழைவுவாயில் அமைக்க ஒப்பந்தம்

சென்னை, ஆக. 23– சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஓடிஏ நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்தில், சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகே புதிய நுழைவு / வெளியேறும் அமைப்பை கட்டுவதற்கான ஒப்பந்த்தை ஸ்ரீ ராதா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திற்கு ரூ.8.52 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் வழங்கப்பட்டது. இதுவரை நங்கநல்லூர் சாலை மெட்ரோ நிலையத்திற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது. இப்போது கட்டப்படும் இந்த கூடுதல் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி சாலையின் இரு […]

Loading

செய்திகள்

மதுரையில் அலைஅலையென திரண்ட தொண்டர்கள் ‘ஜனநாயகன்’ விஜய்: இளைஞர்கள் குதூகலம்

மதுரை, ஆக. 21– த.வெ.க. மாநாட்டிற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே தொண்டர்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. 2026 சட்டமன்ற […]

Loading

செய்திகள்

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, ஆக. 21– டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று காலை முதலமைச்சர் ரேகா குப்தாவின் வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கு […]

Loading

செய்திகள்

1,538 டன் அரிசியை வீணாக்கிய அதிகாரிகள்

தஞ்சாவூர், ஆக.21– தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் சட்டசபை குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் 1,538 டன் அரிசியை அதிகாரிகள் வீணாக்கியது அம்பலமானது. தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில், இன்று காலை சட்டசபை உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வு குழுவினர், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். அதில் கடந்த 2022–ம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி, […]

Loading