செய்திகள்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா: தமிழகம் முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்

சென்னை, ஆக. 27– விநாயகர் சதுர்த்தி விழா இன்று தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமா கொண்டாட்டப்பட்டது. இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அவ்வகையில் இன்று (27.8.2025) விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் குடும்பம் குடும்பாக சென்று விநாயகரை தரிசனம் செய்தனர். […]

Loading

செய்திகள்

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்: பிரதமர் மோடி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

புதுடெல்லி, ஆக. 27– பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த இன்றைய விநாயகர் சதுர்த்தி நாளில் அனைவருக்கும் ஐஸ்வரியத்தை வழங்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து இயக்கங்களான இந்து முன்னணி, விசுவ ஹிந்து பரிஷத், சிவசேனை, இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் பல்வேறு விநாயகர் சிலைகளை அமைத்து விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாடி […]

Loading

செய்திகள்

ஐ.டி. ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு

சென்னை, ஆக. 27– கேரளாவில் ஐ.டி. ஊழியர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2011ஆம் ஆண்டு வினயன் இயக்கிய ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதன் பிறகு கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், றெக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் மதுபான பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஐ.டி. ஊழியர் […]

Loading

செய்திகள்

நாளை விநாயகர் சதுர்த்தி: பூக்களின் விலை கடும் உயர்வு

சென்னை, ஆக. 26– நாளை விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் வழக்கத்தைவிட இன்று பூக்களின் வரத்து அதிகமாக இருந்தாலும் விலை கடுமையாக உயர்ந்தது. குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். […]

Loading

செய்திகள்

மயிலை புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில்

சென்னை, ஆக 26– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தி தொடங்கி வைத்தார். இனி தமிழ்நாட்டில் செயல்படுகின்ற 37 ஆயிரத்து 416 அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கின்ற 20 லட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் தினந்தோறும் […]

Loading

செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் மின்சாரக் கார்: பிரதமர் மோடி இயக்கி வைத்தார்

ஆமதாபாத், ஆக. 26– குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மாருதி சுசூகியின் முதல் மின்சாரக் காரை கொடி அசைத்து பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி நேற்று மாலை ஆமதாபாத் நகரில் 3 கி.மீ. தூரத்துக்குப் பிரம்மாண்ட சாலை பேரணியில் பங்கேற்றார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் தொடங்கி வைத்தார். இந்நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி முதல் முறையாக மின்சாரக் காரை தயாரித்துள்ளது. […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … கண்ணதாசன் சாலை 3 ..! ….. ராஜா செல்லமுத்து

காவல்த் துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக ஒரு போன் கால் வந்தது. அந்த அழைப்பை ஏற்ற காவல்த் துறை அதிகாரி “அப்படியா எங்கே?” என்று கொஞ்சம் வியப்பாய்க் கேட்டார். “கண்ணதாசன் சாலையிலே சார்” “கண்ணதாசன் சாலையா?” “ஆமா சார்” “சரி, உடனே அங்க போலீஸ அனுப்புறேன். அங்க ஏதும் பிரச்சினை வந்தா எங்களுக்கு உடனே போன் பண்ணுங்க” என்று காவல்த்துறை அதிகாரி சொல்ல “சரிங்க சார்” என்று அந்த அழைப்பைத் துண்டித்தான், தகவல் சொன்னவன். சிறிது நேரத்திற்கெல்லாம் […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாலை.. /சாலை 2 – ராஜா செல்லமுத்து

தேனாம்பேட்டை சிக்னலைத் தாண்டி எஸ் ஐ டி கல்லூரியை நோக்கிச் செல்லும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். ‘ எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவங்களுக்கெல்லாம் வாழும் போதே யாரும் மரியாதை கொடுக்கிறது இல்லை. செத்த பிறகு மரியாதை கொடுக்குறாங்க .அதுவும் பழைய கவிஞர்கள இங்க யாரும் நினைவு வைக்க மாட்டாங்க ‘ என்று வருத்தப்பட்டுக் கொண்டே ஆழ்வார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பாரதிதாசன் சாலையில் நின்று புலம்பிக் கொண்டு இருந்தார் ஒரு பெரியவர். அவரைப் […]

Loading

செய்திகள்

வேரோடு பிடுங்கி எறிந்தால் தி.மு.க. பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி

நெல்லை, ஆக. 23– அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக […]

Loading

செய்திகள்

பிளஸ்-2 மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

புதுக்கோட்டை, ஆக. 23– புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ் (வயது 52). இவர் 16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கீரனூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை […]

Loading