செய்திகள்

‘‘விவசாயிகளின் விரோதி அமைச்சர் தங்கம் தென்னரசு’’: எடப்பாடி சரமாரி குற்றச்சாட்டு

திருச்சுழி, செப்.2– காவிரி – குண்டாறு திட்டம், அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்க மறுத்து விட்டார் அமைச்சர் தங்கம் தென்னரசு என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் நேற்று திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்கள் மத்தியில் அண்ணாதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசியதாவது:– இரவு 10 மணி ஆனபிறகும் அண்ணா தி.மு.க. வை வெற்றி அடையச் […]

Loading

செய்திகள்

இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு: ஸ்டாலின் பேச்சு

சென்னை, செப்.2– இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் தொழில் அதிபர்களுடனான சந்திப்பில் மொத்தம் 7020 கோடி ரூபாய் முதலீட்டில் 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 26 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஜெர்மனியில் 1–ந் தேதி அன்று நடைபெற்ற தமிழ்நாடு ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– உலகின் முன்னணி தொழில் வல்லரசுகளில் ஒன்றாகவும், நவீன உற்பத்தி, […]

Loading

செய்திகள்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி, செப். 2– திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரிலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பிற்பகல் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து மாவட்ட […]

Loading

செய்திகள்

இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடெல்லி, செப்.2– இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் உள்ள யஷோ பூமியில் இன்று முதல் 4-ம் தேதி வரை செமிகான் இந்தியா 2025 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மாநாட்டை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:- நான் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன். […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் 78 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை, செப்.2– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77,800க்கு விற்பனை ஆகிறது. உலகின் பல நாடுகள் தங்களிடம் உள்ள அன்னிய செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியை தங்கமாக மாற்றி வருகின்றன. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 9,705 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

புதுடெல்லி, செப் – 2 வடமேற்கு வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வடக்கு வங்கக்கடலில், இன்று புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடையலாம். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் […]

Loading

செய்திகள்

விருகம்பாக்கத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை: 3 பேர் கைது

சென்னை, செப். 2– விருகம்பாக்கம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெளி மாநில, ஒரு நம்பர் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின் பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், தனிப்படை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் […]

Loading

செய்திகள்

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை: இன்று இந்தியா வருகிறார் சிங்கப்பூர் பிரதமர்

புதுடெல்லி, செப். 2– சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அவர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வோங் இந்தியா வருகிறார். சிங்கப்பூர்–இந்தியா ராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவையொட்டி டெல்லியில் நடக்க உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் வோங் பங்கேற்கிறார். டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் சந்திக்கிறார். அவருக்கு பிரதமர் மோடி மதிய […]

Loading

செய்திகள்

பட்டினப்பாக்கம், நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னை, ஆக. 31– சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி இன்று நடந்தது. பட்டினப்பாக்கம், நீலங்கரை கடற்கரையில் ராட்சத கிரேன் மூலம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில்கள் சார்பிலும், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. சென்னையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைக்கும் பணி நடந்தது. பட்டினப்பாக்கம் (மெரினா), […]

Loading

செய்திகள்

பரமக்குடி அருகே இன்று அதிகாலை லாரி–கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

ராமநாதபுரம், ஆக. 31– ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இன்று அதிகாலையில் லாரி–கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து, சாமான்களை ஏற்றிய லாரி ராமநாதபுரம் நோக்கி வந்தது. இதேபோல் ராமநாதபுரத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் குற்றாலம் நோக்கி காரில் சென்றனர். இன்று அதிகாலை 3 மணிக்கு பரமக்குடி அருகே நென்மேனி இருவழிச் சாலையில் காரும், லாரியும் நேருக்கு நேர் […]

Loading