செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: திருப்பத்தூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

திருப்பத்தூர், ஜன.20– திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறை சார்பாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவசௌந்திரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார். 37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, 1.1.2026 முதல் 31.1.2026 வரை சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

கடலூரில் 1,027 மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

கடலூர், ஜன.20– வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் 1,027 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:– முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் […]

Loading

செய்திகள்

சென்னை பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்

சென்னை, ஜன. 20– இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளிச்சாலை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 11–ம் வகுப்பு பயிலும் 604 மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். தொடர்ந்து, அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 மற்றும் 12–ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்கான சிற்றுண்டி பயிர் வகையினை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:– சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் […]

Loading

செய்திகள்

மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி

திருக்கோவிலூர், ஜன.20- கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் திருவண்ணாமலையில் இருந்து அருணாசலேஸ்வரர் சாமி தீர்த்தவாரிக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று அருணாசலேஸ்வரர் பக்தர்கள் புடைசூழ மணலூர்பேட்டைக்கு வந்தடைந்தார். அங்கு விழா குழுவினர்கள், பக்தர்கள் தாரை, தப்பட்டை, மேள, தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, விழா நடைபெறும் தென்பெண்ணை ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கு தீர்த்தவாரி […]

Loading

செய்திகள்

டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை விமான நிலையத்தில் நேரில் வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லி, ஜன.20-– டெல்லி வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யான் நேற்று டெல்லி வந்தார். அதிபர் பொறுப்பை ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இது 3-வது முறை ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இது 5-வது பயணம். டெல்லி விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக […]

Loading

செய்திகள் முழு தகவல்

சென்னை கோவளத்தில் “மாமல்லன்” நீர்த்தேக்கம் அமைக்கும் பணி : ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, ஜன. 19: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களில் பழைய மாமல்லபுரம் சாலைக்கும் கிழக்கு கடற்கரை சாலைக்கும் இடையில் கோவளம் உபவடிநிலப் பகுதியில் 5,161 ஏக்கர் பரப்பளவில் 342 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் நீர்த்தேக்கத்திற்கு “மாமல்லன்” என்று பெயர் சூட்டி, நீர்த்தேக்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கு 34 கி.மீ […]

Loading

செய்திகள்

ஆஸ்திரியா பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

ஆஸ்திரியா, ஜன.19: ஆஸ்திரியா ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். ஆஸ்திரியா நாட்டின் ஆல்ப்ஸ் மலை பகுதிகளில் பனிச்சறுக்கு சாகச விளையாட்டுகளில் வீரர்கள் ஈடுபடுவது வழக்கம். எனினும், சமீப நாட்களாக இந்த பகுதியில் அடிக்கடி கடும் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீரர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஸ்டைரியா மாகாணத்தில் முர்தல் மாவட்டத்தில் செக் நாட்டின் 7 பேர் அடங்கிய சுற்றுலா குழுவினர் பனிச்சறுக்கு விளையாட்டில் […]

Loading

செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத தி.மு.க. அரசு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: 25வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. யார் நலனிலும் அக்கறையில்லாத தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டம் இன்றும் 25ம் நாளாக நீடிக்கிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து எந்தக் கவலையும் […]

Loading

செய்திகள்

மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, ஜன. 19: உயிர்களை பாதுகாக்கவும், நிவாரணம் வழங்கவும் தேசிய பேரிடர் மீட்புப்படை அயராது பாடுபடுகிறது, சர்வதேச அளவில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை என்பது இந்தியாவில் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் ஒரு சிறப்புப் படையாகும், இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த படையின் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் 14 பேர் பலி

கராச்சி, ஜன. 19: பாகிஸ்தான் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கடைகள் தரை தளத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று தினம் இரவு திடீரென இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் தரை தளத்தில் உள்ள கடைகளில் […]

Loading