செய்திகள்

எடப்பாடி பழனிசாமி 16–ந்தேதி டெல்லி பயணம்

சென்னை, செப்.14– அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (16–ந்தேதி) டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று நிலையில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார். அண்ணா தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் […]

Loading

செய்திகள்

இசைஞானி இளையராஜாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்

சென்னை, செப்.14- அரை நூற்றாண்டு காலம் பலரது இதயத்தை ஆண்ட இசை​ஞானி இளைய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்தார். 1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா, லண்டனில் தனது கனவு […]

Loading

செய்திகள்

மக்கள் வெள்ளத்தில் விஜய்; திருச்சி நகரம் குலுங்கியது

* அலை அலையென திரண்ட தொண்டர்கள் * நத்தையாய் நகர்ந்தது பிரச்சார வேன் திருச்சி, செப் 13– திருச்சியில் இன்று 2026 தமிழக சட்ட சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி உள்ளார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். அலை அலையென திரண்டு வந்த தொண்டர்கள், மக்கள் கூட்டத்தால் திருச்சி நகரமே குலுங்கியது. மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக தொண்டர்கள் காத்திருந்தார்கள். விமான நிலைய வாசலிலிருந்து புறப்பட்ட விஜய்யின் பிரச்சார வேன் மக்கள் […]

Loading

செய்திகள்

மணிப்பூரில் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு

இம்பால், செப். 13– மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு மாநில நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. . மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் […]

Loading

செய்திகள்

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.4 ஆக பதிவு சுனாமி எச்சரிக்கை

மாஸ்கோ, செப். 13– ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தில் இருந்து கிழக்கே 111 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 8.03 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம், ரிக்டர் […]

Loading

செய்திகள்

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு அவசர உதவி, மீட்டு வர நடவடிக்கை :

சென்னை, செப் 13– நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலைகுறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். முதலமைச்சரின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அவர்களை மீட்டுவருவதற்கு, புதுடெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24×7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாள நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை […]

Loading

செய்திகள்

‘‘வாக்கு திருட்டுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினை’’: ராகுல் காந்தி ஆவேசம்

ஆமதாபாத், செப்.13- வாக்கு திருட்டுதான் நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல தேர்தல்களில் வாக்குகள் திருடப்பட்டு உள்ளதாக பா.ஜனதா மற்றும் தேர்தல் கமிஷன் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த பிரச்சினையை மையமாக வைத்து பீகாரில் அவர் வாக்காளர் உரிமை யாத்திரையையும் நடத்தினார். இதன் மூலம் வாக்கு […]

Loading

செய்திகள்

15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்

புதுடெல்லி, செப்.12– நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். துணை ஜனாதிபதி தேர்தலில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதனையடுத்து பதவியேற்பு விழா இன்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

Loading

செய்திகள்

கோயம்பேட்டில் திருடப்பட்ட அரசுப் பேருந்து நெல்லூரில் பிடிபட்டது

சென்னை, செப். 12– சென்னை கோயம்பேடு பணிமனையில் திருடப்பட்ட அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதனப் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திருப்பதிக்கு செல்ல தயாராக இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் திருடிச் சென்றதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிமனை மேலாளர் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பேருந்தை […]

Loading

செய்திகள்

சிக்கிம் நிலச்சரிவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

கேங்டாக், செப்.12– சிக்கிமில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு சிக்கிம், யாங்தாங் தொகுதிக்குள்பட்ட ரிம்பி பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இடைவிடாத மழை இருந்தபோதிலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி, ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். […]

Loading