செய்திகள்

விஜய் குறித்து பேச்சு: சீமான் மீது போலீசில் புகார்

மேட்டுப்பாளையம், செப். 17– நடிகர் விஜய்யை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியும், ஒருமையிலும் பேசியதாக சீமான் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கோவையில் 14–ந் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது .இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது சீமான், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு த.வெ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் த.வெ.க […]

Loading

செய்திகள்

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், செப். 17– கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அந்த மாநில அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார். பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலம், வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்துக்கு கோட்டயம் மாவட்ட […]

Loading

செய்திகள்

அஜித் நடித்த குட் பேட் அக்லி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கம்

சென்னை, செப். 17– நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிகர் அஜித் உள்ளிட்ட பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்தத் திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, ஏஞ்சோடி […]

Loading

செய்திகள்

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, செப். 17– விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். திருச்சியில் விஜய்யை வரவேற்க த.வெ.க. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்ததால், அங்கு விஜய் பேசுவதற்கு மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. தொண்டர்கள் சூழ்ந்ததால், சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தை அவர் கடந்து பிரச்சாரம் செய்வதற்கான இடத்திற்கு வர சுமார் 5 மணி […]

Loading

செய்திகள்

பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 வடமாநில ஆசாமிகள் கைது

ஆவடி, செப். 16– பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில ஆசாமிகள் 3 பேரை கைது செய்தனர். பூந்தமல்லி பைபாஸ் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் 3 பேர் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடம் சென்று […]

Loading

செய்திகள்

மதுரை தொழிலதிபர் கொலை: பங்குதாரர் உள்பட 7 பேர் கைது

மதுரை, செப். 16– மதுரை தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை ஏவி கொலை செய்த பங்குதாரர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை பார்க் டவுன் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 50). தொழிலதிபரான இவர், முனிச்சாலை பகுதியில் பார்சல் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரிடம் தகராறில் ஈடுபட்டு, வாள் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

தங்கம் விலை இன்று ரூ.82 ஆயிரத்தை கடந்தது

சென்னை, செப். 16– தங்கம் இன்று ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்து 240க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது […]

Loading

செய்திகள்

எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி 108–வது பிறந்தநாள்: ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, செப் 16– விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 108–வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘இந்திய நாட்டின் விடுதலைக்குப் போராடிய வீரரும், முன்னாள் அமைச்சரும், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக முன்னின்ற சமூகநீதித் தலைவருமான ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணக்கம் செலுத்தினேன்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

செய்திகள்

அமித்ஷாவை இன்று சந்திக்கும் எடப்பாடி

புதுடெல்லி, செப். 15– மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்தித்து பேசுகிறார். 2026 சட்டமன்ற தோ்தலில் வெற்றி பெற அண்ணா தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாள்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்தார். செங்கோட்டையனின் இந்த செயல்பாட்டை தொடர்ந்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி […]

Loading

செய்திகள்

எடப்பாடிக்கு ஸ்டாலின் சவால்

10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்ன? * ரூ.2885 கோடி திட்டங்களுக்கு அடிக்கல், திறப்பு * 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனைப்பட்டா கிருஷ்ணகிரி, செப்.14– கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,884.93 கோடி செலவிலான 193 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,23,013 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த விழாவில் வாக்குறுதிகள் பற்றி எடப்பாடி […]

Loading