செய்திகள்

எச்1 – பி விசாவுக்கு இனி ரூ.88 லட்சம் கட்டணம்: டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், செப் 20- விசாவுக்கு நிறுவனம் ஆண்டுக்கு 85 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு, புதிய விசா மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட இந்த திட்டத்தை டிரம்ப் அறிமுகப்படுத்த உள்ளார். புதிய விதிகள் படி, எச் 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட […]

Loading

செய்திகள்

மீனவர்கள் பிரச்சினையில் ஸ்டாலின் கபட நாடகம்: விஜய் கடும் தாக்கு

நாகப்பட்டினம், செப். 20- த.வெ.சு. தலைவர் விஜய் 2ம் கட்டமாக இன்று நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்தார். திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மீனவர்கள் பிரச்சினையில் ஸ்டாலின் கபட நாடகம் ஆகிறார் என்று விஜய் கூறினார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அப்போது […]

Loading

செய்திகள்

‘‘இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நான் மிக நெருக்கமாக உள்ளேன்’’: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

செக்கர்ஸ், செப். 19– ‘‘இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது’’ என்றும், பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் அவருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:– “நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக உள்ளேன், நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை கொண்டுள்ளேன். சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க […]

Loading

செய்திகள்

2 நாள் பயணமாக மு.க.ஸ்டாலின் 29–ந்தேதி ராமநாதபுரம் செல்கிறார்

ராமநாதபுரம், செப். 19– 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28–ந்தேதி ராமநாதபுரம் செல்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் செல்ல உள்ளார். 29ந் தேதி மாலை பரமக்குடிக்கு செல்லும் முதலமைச்சர் கட்சி […]

Loading

செய்திகள்

விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த ‘மனநலம்’ பாதித்த இளைஞர் மீட்பு; வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

சென்னை, செப். 19– தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் வீட்டில் பலத்த பாதுகாப்பையும் மீறி மொட்டை மாடியில் பதுங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை போலீசார் மீட்டனர். இந்நிலையில் அடுத்து விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டின் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் பதுங்கி இருந்துள்ளார். […]

Loading

செய்திகள்

நாளை நாகையில் விஜய் பிரச்சாரம்: கட்டுப்பாடுகளை விதித்த போலீசார்

* பொதுமக்கள்–போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது * பொதுச் சொத்துக்கு தொண்டர்களால் சேதம் ஏற்படக்கூடாது நாகை, செப். 19– நாகை மாவட்டம், புத்தூர் அண்ணா சிலை அருகே நாளை (20ந் தேதி) பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி வழங்கி உள்ளனர். அடுத்தாண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தலைவர்கள் பல்வேறு கட்டங்களாக சுற்றுப் பயணங்கள் […]

Loading

செய்திகள்

உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு; வீடுகள் இடிந்தன: 5 பேர் மாயம்

டேராடூன், செப். 18– உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் இன்று அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றை முன் தினம் டேராடூனில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக தம்சா […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும்: ஒப்பந்தம் கையெழுத்து

கத்தார், செப். 18– பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதியைத் தாக்கியதாக கருதி பதிலடி கொடுக்கப்படும் என்ற முக்கிய ஒப்பந்தம் கையொப்பம் ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் […]

Loading

செய்திகள்

போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: டிரம்ப்

வாஷிங்டன், செப். 18– போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா […]

Loading

செய்திகள்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 27 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

சீர்காழி, செப். 18– சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 27 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அரசு மருத்துவமனையில் தாய்சேய் நல மையம் இயங்கி வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு டாக்டர்கள் ஊசி போட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு திடீரென நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது […]

Loading