செய்திகள்

எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது: டிடிவி தினகரன் உறுதி

சென்னை, செப். 24– அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க முடியாது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்திற்குட்பட்ட மாவட்டக் கழக செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அரசியலில் இருப்பதால் அரசியல் மட்டும்தான் […]

Loading

சினிமா செய்திகள்

நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், சாய்பல்லவி, லிங்குசாமி, அனிருத்துக்கு ‘‘கலைமாமணி’’ விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, செப் 24– நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம்பிரபு, மணிகண்டன், நடிகை சாய்பல்லவி, டைரக்டர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத்துக்கு ‘‘கலைமாமணி’’ விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல நாடகத்துறையில் காரைக்குடி நாராயணன், பூச்சி முருகனுக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மபூஷன் கே.ஜே. யேசுதாசுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கப்படுகிறது. கலைவாணர் அரங்கில் அடுத்த மாதம் விழா நடைபெறும். இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, செப். 24– சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. பெரும்பாலும் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.சென்னை ஐகோர்ட், ஜிஎஸ்டி அலுவலகம், சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை

ராஞ்சி, செப் 24– ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கும்லா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் […]

Loading

செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி

சென்னை, செப். 24– உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்னைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Loading

செய்திகள்

நெல்லை – -சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இன்று முதல் இயக்கம்

நெல்லை, செப். 24– நெல்லை – -சென்னை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் 20 பெட்டிகளுடன் 1440 பேர் பயணிக்கும் வகையில் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் அதிநவீன சொகுசு வசதியுடன் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். நெல்லையில் காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் […]

Loading

செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே? ஸ்டாலின் கேள்வி

சென்னை, செப். 23– 8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாமே என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீர்திருத்தம் நாடு முழுவதும் நேற்று அமலானது. இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள், டி.வி, ஏசி, கார்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் வரை என சுமாா் 375 பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு தொடர்பாக முதலமைச்சர் […]

Loading

செய்திகள்

தங்கம் ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டியது

சென்னை, செப். 23– தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக, ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால், தங்கத்தின் விலை உயர்வைக் கண்டு வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து […]

Loading

செய்திகள்

காதல் விவகாரத்தில் வாலிபர் ஓடஓட வெட்டிக் கொலை: சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது

திருச்செந்தூர், செப். 23– காதல் விவகாரத்தில் வாலிபர் ஓடஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி நகர் குடியிருப்பை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 24). எலக்ட்ரீசியன். இவருக்கும் திருச்செந்தூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது மகளை காணவில்லை […]

Loading

செய்திகள்

உலக பிரசித்தி பெற்ற குலசை தசரா திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூர், செப். 23– குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று தொடங்கி, அக்டோபர் 2–ந் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. […]

Loading