செய்திகள்

தென்காசி மாணவி பிரேமாவுக்கு வீடு கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை வழங்கினார்

சென்னை, செப்.27- மனக்குறையை வெளிப்படுத்திய 24 மணி நேரத்தில் தென்காசி மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கல்வியில் சாதித்த மாணவர்கள் தமிழக அரசை பாராட்டியும் பேசினார்கள். அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தில் உதவி பெற்ற தென்காசி மாணவி பிரேமா, தனது முதல் மாத […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் ரூ.85 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, செப். 27– சென்னை இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனிடையே சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த 23ம் தேதி ஒரு சவரன் தங்கம் […]

Loading

செய்திகள்

போர் முடிவுக்குப் பிறகு பதவி விலகுவேன்: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

கிவி, செப். 27– ரஷ்யாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். கடந்த 2019ல் உக்ரைன் அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் ஜெலென்ஸ்கி. 2024 பிப்ரவரி மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ரஷ்யாவுடனான போர் நீடிப்பதால் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜெலென்ஸ்கி கூறியதாவது:– ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே முதல் […]

Loading

செய்திகள்

லடாக்கில் தொடரும் ஊரடங்கு: வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு

லே, செப். 25– லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். அங்கு 2வது நாளாக இன்றும் ஊரடங்கு தொடர்கிறது. பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக லடாக் மக்​கள் தங்​கள் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் நிலம், கலாச்​சா​ரம் மற்​றும் வளங்​களை பாது​காக்​கும் வகை​யில் அரசி​யல் சாசன பாது​காப்​பும் கோரி வரு​கின்​றனர். ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக […]

Loading

செய்திகள்

பாரதி மகளிர் கல்லூரியில் நிறுவன மேலாண்மைக்குழு:

சென்னை, செப்.25– மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல் தொழில்நுட்ப அறிவுடன், சமூக உணர்வு, பண்பாடு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை கற்றறிய கல்லூரி தோறும் நிறுவன மேலாண்மைக்குழுவினை அமைத்திட ஏதுவாக சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். உயர்கல்வித் துறை அரசு செயலாளர் பொ.சங்கர் தலைமை வகித்தார், கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் அமைச்சர் பேசியதாவது:– இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் புத்தக அறிவுடன் மட்டும் இல்லாமல், […]

Loading

செய்திகள்

இலங்கையில் கேபிள் கார் விபத்து: துறவிகள் 7 பேர் பரிதாப பலி

கொழும்பு, செப். 25– இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த மதத்தை சேர்ந்த துறவிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வடமேற்கு இலங்கையின் வன மடாலயத்தில் கேபிள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து கொழும்பிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள நிகவெரட்டியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த மடாலயத்தில் நிகழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி […]

Loading

செய்திகள்

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுடெல்லி, செப்.25- தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ரெயில்வே ஊழியர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை நேற்று அளித்தது. இந்த ஒப்புதலின்படி மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தித்திறன் சார்ந்த போனசாக ரூ.1,865.68 கோடி வழங்கப்படுகிறது. இதில் தகுதியுள்ள ஒவ்வொரு ரெயில்வே […]

Loading

செய்திகள்

தரமணி பகுதியில் ஹெராயின் போதைப்பொருள்: 2 பேர்

சென்னை, செப். 24– சென்னை தரமணி பகுதியில் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த வடமாநில ஆசாமிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தரமணி தபால் நிலையம் எதிரில் கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் ஹெராயின் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது அதன்பேரில், தரமணி காவல் நிலையத்தில் […]

Loading

செய்திகள்

போர்களை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்; இத்தாலி பிரதமர் மெலோனி

நியுயார்க், செப். 24– உலக நாடுகள் இடையேயான போர்களை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்காற்றும் என்று இத்தாலி பிரதமர் மெலோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தமாத தொடக்கத்தில், பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச அளவில் நிலவும் முக்கிய பிரச்னைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் இருவரும் பேசினர். அப்போது, பேச்சுவார்த்தை மற்றும் சுமூக தீர்வுக்கான முழு ஆதரவை இந்தியா […]

Loading

செய்திகள்

தைவானில் பலத்த சூறவாளி; ஏரி உடைந்து 14 பேர் பலி: 129 பேர் மாயம்

ஹுவாலின், செப். 24– தைவான் நாட்டில் ஏற்பட்ட பலத்த சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியானார்கள். 129 பேரைக் காணவில்லை. தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் கடந்த ஒரு சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த சூறாவளி காரணமாக அந்த பகுதியில் இருந்த ஏரியின் கரைகள் உடைந்தது. ஏரி தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் தண்ணீரில் மூழ்கி 14 பேர் பலியானார்கள். மேலும் அந்த பகுதியில் […]

Loading