சென்னை, ஜன.5– தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தி்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா, த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யு.மான கனிமொழி இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை […]
![]()


