புவனேஸ்வர், செப். 27– ஒடிசாவின் ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரெயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவையையும் சுதேசி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட 97,500க்கும் மேற்பட்ட 4ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களையும் அவர் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளர்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு துவக்கப்பட்டுள்ளது. […]
![]()


