புல்வாமா, நவ. 14– செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான டாக்டர் உமர் நபியின் வீட்டை புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர். முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10–ந்தேதி மாலை 6.52 மணிக்கு ஹூண்டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்தவர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் […]
![]()


