சென்னை, டிச.13– இந்தியாவிலேயே முதல்முறையாக முதலமைச்சரால் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படவுள்ள எச்.பி.வி. (HPV) – கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தின்மூலம் தமிழ்நாட்டில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று, எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டார். […]
![]()




