செய்திகள்

தவெகவுடன் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் விரும்பினார்

கோவை, ஜன. 27– தவெகவுடன் கூட்டணி வைக்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விரும்பியதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்துக்கு வருகைதந்த செங்கோட்டையனிடம், தவெக மீதான அண்ணா தி.மு.க. விமர்சனம், அண்ணா தி.மு.க. கூட்டணியில் தினகரன் இணைந்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு பதிலளித்து செங்கோட்டையன் கூறியதாவது:– பா.ம.க. ராமதாஸ் தவெகவுடன் பேசியதாக செய்தி பார்த்தேன், நல்லது நடக்கட்டும். அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் […]

Loading

செய்திகள்

பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை அருள் எம்.எல்.ஏ. பேட்டி

திண்டிவனம், டிச. 23– பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை என்று அருள் எம்.எல்.ஏ. கூறினார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூர், சேலம் உள்ளிட்ட 20 தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பா.ம.க.இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். […]

Loading

செய்திகள் முழு தகவல்

ராமதாஸ் – அன்புமணி சிவில் நீதிமன்றத்தை அணுக டெல்லி ஐகோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச. 3: பா.ம.க. விவகாரத்தில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமதாஸ் – அன்புமணி சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. பா.ம.க.வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் […]

Loading

செய்திகள்

அன்புமணி பிரிவு பா.ம.க. நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் சந்திப்பு

சென்னை, டிச.4: சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை, பா.ம.க. நிர்வாகிகள் வக்கீல்கள் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ஆகியோர் திடீரென சந்தித்தனர். இதுகுறித்து அண்ணா தி.மு.க. வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கே. பாலு, முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் […]

Loading

செய்திகள்

பா.ம.க.வினர் விரும்பும் நல்லதொரு கூட்டணி உருவாகும்: பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

சென்னை, ஆக.18- வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வினர் விரும்பும் நல்லதொரு கூட்டணி உருவாகும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். புதுவை அடுத்த பட்டானூரில் நேற்று நடந்த பா.ம.க. மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:- நமது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களுக்கான தீர்மானங்கள் தான். தமிழ்நாட்டில் உள்ள 324 சமுதாய மக்களுக்காகத்தான் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். நாம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது, நமக்கு 10.5 […]

Loading