செய்திகள்

எடப்பாடி– நயினார் நாகேந்திரன் ஆலோசனை அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு

சென்னை, ஜன. 9– சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. வரும் சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி இறுதியானதைத் தொடர்ந்து, டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் 5-ந்தேதி “மோடி பொங்கல்” மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்

திருச்சி, ஜன.2-– திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசார பயணங்களை முன்னெடுத்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என்று அரசியல் கட்சிகள் தங்களை பரபரப்பு வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் […]

Loading

செய்திகள்

உத்தரபிரதேசம் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் தேசிய நினைவுச் சின்ன அருங்காட்சியகம்:

பிரதமர் மோடி திறந்து வைத்தார் லக்னோ, டிச.26- உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவுச்சின்ன அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் 65 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடி செலவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது: பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

புதுடெல்லி, செப். 4– அண்ணா தி.மு.க. வை விமர்சிக்கக்கூடாது என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்தும், தமிழக பா.ஜ.க.வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்பின்னர், அண்ணா தி.மு.க. குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி, ஆக.18- துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (வயது 68) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனா திபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை […]

Loading

செய்திகள்

மாலேகான் குண்டுவெடிப்பு: பா.ஜ.க. முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

மும்பை, ஜூலை 31– மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ கோர்ட் விடுதலை செய்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29–ந்தேதி மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் பகுதியில் உள்ள மசூதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. […]

Loading

செய்திகள்

திருப்புவனத்தில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இணைந்து ஆர்ப்பாட்டம்

திருப்புவனம், ஜூலை 2– அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு திருப்புவனத்தில் இன்று அண்ணா தி.மு.க. – பாஜக இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் திருபுவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் படுகொலையின் பின்னணியில் உள்ள திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும், அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. […]

Loading