விழுப்புரம், டிச.25- விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ருவண்ணாமலையில் ஆய்வுப்பணியை முடித்து விட்டு மாலையில் தனி ஆய்வு ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன் […]
![]()


