செய்திகள்

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச. 16: தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (16–ந்தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தென் தமிழகத்தில் ஒருசில […]

Loading

செய்திகள்

நெல்லையில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்: கல்லூரி மூடல்

நெல்லை, அக். 10– நெல்லையில் தனியார் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை கல்லூரி மூடப்பட்டது. நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவர்களில் சிலருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவர்களுக்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான […]

Loading

செய்திகள்

நெல்லை – -சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இன்று முதல் இயக்கம்

நெல்லை, செப். 24– நெல்லை – -சென்னை வந்தே பாரத் ரெயில் இன்று முதல் 20 பெட்டிகளுடன் 1440 பேர் பயணிக்கும் வகையில் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் அதிநவீன சொகுசு வசதியுடன் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லை, சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைத்தார். நெல்லையில் காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 1. 40 மணியளவில் […]

Loading

செய்திகள்

நெல்லையில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை, செப். 4– மின்வாரிய ஊழியர்களின் தவறு காரணமாக நெல்லையில் தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்கு உட்பட்ட மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு வழக்கம்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்துள்ளார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற நிலையில் மாதாந்திர மின் கட்டண விபரம் மாரியப்பனின் செல்போனுக்கு வந்துள்ளது. தொடர்ந்து அவர் தனது […]

Loading

செய்திகள்

நெல்லையில் அமித்ஷா தலைமையில் 22ம் தேதி பாஜக மண்டல மாநாடு

நெல்லை, ஆக. 18– நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., அண்ணா தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். களத்தில் சென்று மக்களை சந்திப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். வடமாநிலங்களில் பா.ஜ.க. கொடிக்கட்டி பறக்கும் நிலையில், […]

Loading

செய்திகள்

5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

நெல்லை, ஆக. 1– ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி, பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியை. பணிக்கு செல்ல வசதியாக தூத்துக்குடியில் வசித்து வருகிறார்கள்.இவர்களுடைய மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). இவர் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்திருந்த கவின் கடந்த 27-ந்தேதி […]

Loading

செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி பஸ்கள் தீ வைத்து எரிப்பு

நெல்லை, ஜூலை 18– நெல்லையில் தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், பள்ளி பஸ்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவியது. நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவனை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால், மாணவன், பள்ளிக்கு வரும் போது, பூச்சி மருந்து சாப்பிட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி […]

Loading