செய்திகள்

சென்னை கொளத்தூரில் ரூ.111 கோடியில் துணை மின் நிலையம்: ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை, அக்.16-– சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகரில் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணேஷ் நகர் பகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.110.92 கோடி மதிப்பீட்டில் 230/33 கிலோ வாட் வளிம காப்பு துணைமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மின் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. […]

Loading