செய்திகள்

சென்னையில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு: 3 பயணிகள் காயம்

சென்னை, ஜன. 5: திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே அந்த ரெயில் வந்தபோது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த சம்பவத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Loading

செய்திகள்

ரஷ்ய அதிபர் புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல்

கீவ், டிச. 30: ரஷ்ய அதிபர் புடின் வீட்டை குறிவைத்துத் தாக்குதல். இது நல்லதல்ல, நான் மிகவும் கோபமாக இருக்கிறேன் என டிரம்ப் கூறினார். ரஷ்யாவின் வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய அதிபர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி இருந்தார். அவர், ”91 ட்ரோன்கள் மூலம் புடினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் ரஷ்யாவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை பாதிக்கும்’ என்றார். புடினின் […]

Loading

செய்திகள்

நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, டிச. 4: டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நீட்டித்து வருகின்றது. நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 3.1 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1.6 டிகிரி குறைந்து 23.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் […]

Loading

செய்திகள்

கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிப்பு: 4 வாரங்களில் முடிவெடுக்க பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 28: கோவிலுக்கு தானமாக கொடுத்த நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறையில் மாவட்ட பதிவாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலின் பக்தர் டாக்டர் டி.செல்வராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், 1957ஆம் ஆண்டில் அலமேலு அம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான திருவேல்விகுடி கிராமத்தில் இருந்த நிலத்தை தானமாக கொடுத்ததாகவும், அந்த நிலத்தை பி.கல்யாணம், பி.கோவிந்தராஜன் ஆகியோர் மோசடியாக விற்பனை பத்திரம் தயாரித்து, […]

Loading

செய்திகள்

புறநகர் ரெயில்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை: மாணவர்கள், இளைஞர்களுக்கு தெற்கு ரெயில்வே எச்சரிகை

சென்னை, நவ. 28: புறநகர் ரெயில்களில் அபாயகரமான முறையில் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை புறநகர் மற்றும் எம்ஆர்டிஎஸ் ரயில் சேவைகளில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ரயில்வேயின் கவனத்திற்கு வந்துள்ளது. சமீப காலங்களில், ஓடும் ரயில்களில் நடைமேடையில் சறுக்குவது […]

Loading

செய்திகள்

பொதுமக்களிடம் புகார் மனு பெற்றார் சென்னை போலீஸ் கமிஷனர் அருண்

சென்னை, நவ. 26– சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் 18 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு […]

Loading

செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா; பக்தர்களுக்கு தரமற்ற அன்னதானம் வழங்கினால் நடவடிக்கை : கலெக்டர் எச்சரிக்கை

திருவண்ணாமலை நவ. 23: திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது தரமற்ற வகையில் அன்னதான உணவு தயாரித்து வழங்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவுறுத்தினார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் அன்னதானம் வழங்குவோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் […]

Loading