சென்னை, செப்.1– அதிக ஊதியம் தருவதாக நம்ப வைத்து தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதா? என அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னையில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி செய்வதற்காக மாதம் ரூ.23,000 ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து, தூய்மைப் பணியாளர்களை மாநகராட்சி அதிகாரிகளும், தி.மு.க. மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைத்துச் சென்று தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வைத்த நிலையில், […]
![]()


