செய்திகள்

கடலூரில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம்: கலெக்டர் சிபி ஆதித்யா திறந்து வைத்தார்

கடலூர், ஜன. 11– கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், “அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக்கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் […]

Loading

செய்திகள்

“உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு தொப்பி, கைபேசி இணைப்பு: உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜன. 10: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் […]

Loading

செய்திகள்

21 வகை விளையாட்டுக்கான பயிற்றுனர் பணியிடங்கள் விண்ணப்பம் பெறும் இணையதளம்: உதயநிதி துவக்கினார்

சென்னை, ஜன. 6: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வளைகோல் பந்து, ஜுடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப்பந்து, டேக்வாண்டோ, டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்றுநர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டினை துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் […]

Loading

செய்திகள்

பெசன்ட் நகர் கடற்கரையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் ‘மதி உணவுத் திருவிழா’: உதயநிதி துவக்கினார்

சென்னை, டிச. 22: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மதி உணவுத் திருவிழாவை திறந்து வைத்து பார்வையிட்டு, பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்தார். உணவுத் திருவிழாவில், 235–க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், […]

Loading

செய்திகள்

‘‘அனைவருக்குமான அரசாக இருப்பது தான் திராவிட மாடல் அரசு’’: உதயநிதி பேச்சு

சென்னை, நவ. 28– சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், பெரியார் திடலில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளையும், ஏழை – எளிய மக்கள் – மாற்றுத்திறனாளிகள் – திருநர்கள் – தூய்மைப்பணியாளர்கள், – சுகாதாரப்பணியில் ஈடுபடுவோருக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், அனைவருக்குமான அரசாக, அனைத்துச் சமுதாயத்துக்குமான அரசாக இருப்பதுதான் திராவிட மாடல் அரசு என்று தி.மு.க. தலைவர் சொல்வார். எனவே, […]

Loading

செய்திகள்

கேளம்பாக்கம் ஊராட்சியில் உதயநிதி பிறந்த நாள் விழா: இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள்: எஸ்.ஆர்.எல். இதயவர்மன் வழங்கினார்

திருப்போரூர், நவ. 28: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளையொட்டி கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எஸ் எல்லப்பன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் இளைஞர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும், வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான எஸ் ஆர் எல். இதயவர்மன் வழங்கினார். செங்கல்பட்டு […]

Loading

செய்திகள்

மாநகர் போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘பஸ் பர்ஸ்ட்’ பிரச்சாரம்: உதயநிதி துவக்கி வைத்தார்

சென்னை, நவ.22: சென்னை அண்ணா சதுக்கம் பஸ் முனையத்தில், மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கு முன்னுரிமைக்கான ‘பஸ் பர்ஸ்ட்’ என்ற பிரச்சாரத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் பொதுப்பஸ்களை முன்னிலைப்படுத்தி, பொது மக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மாநகர் போக்குவரத்து கழகப் பஸ்களுக்கான முன்னுரிமை ‘பஸ் பர்ஸ்ட்’ பிரச்சாரத்தில் சிறப்பு அம்சங்களான குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைதல், தடைகள் மற்றும் நெரிசல் அற்ற பஸ் பயணம், குறைந்த உமிழ்வு போன்ற […]

Loading

செய்திகள்

இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை, நவ.15- இணையதளம், சமூக ஊடகங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியை வாசித்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- பாவேந்தர் பாரதிதாசனார் அறிவுறுத்தியபடி, இனிமையான […]

Loading

செய்திகள்

14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் காங்கேயன் சின்னம் : உதயநிதி அறிமுகம்

சென்னை, நவ.11– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-–வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். காங்கேயன் காளைகள் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கின்றன. காங்கேயன் இன காளைகள் அவற்றின் வேகம் மற்றும் கம்பீரமான தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. மேலும், இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு […]

Loading