செய்திகள்

100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து எடப்பாடி பழனிசாமி, எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை, டிச.18: 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி எப்படி முட்டுக்கொடுக்க போகிறார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-– “பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் விக் ஷித் பாரத்-ரோஜ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ திட்டம் குறித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமித்ஷாவுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

திருவண்ணாமலை, டிச. 15: ‘அன்போடு வந்தால் அரவணைப்போம், ஆணவத்துக்கு அடிபணியமாட்டோம்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் அமித்ஷாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் திருச்சி […]

Loading

செய்திகள்

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை, நவ.23: கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் 5 பேர் குழு அமைப்பு

சென்னை, நவ. 22– தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி, நடிகர் விஜயின் தவெக உடன் கூட்டணி பற்றி பேச இருப்பதாக, அவ்வப்போது தகவல்கள் பரவி வந்தன. இதேபோல பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுகிறது எனவும் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வினருக்கு எஸ்ஐஆர் பயிற்சி : இளங்கோ எம்.பி. தகவல்

மாநிலங்களவை உறுப்பினர் என். ஆர். இளங்கோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வு குறித்து திமுக சட்டத்துறை பயிற்சி முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான திமுக சட்டத்துறையினருக்கும், திமுக இளைஞர் அணியினருக்கும் மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அணியினருக்கும் எஸ்ஐஆர்-ஐ எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சீராய்வை மக்கள் பக்கம் நின்று எதிர்கொள்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை, நவ.1- சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்த செங்கோட்டையனை அண்ணா தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அண்ணா தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார். இதனால் அவரது கட்சிப்பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டன. இருப்பினும் கட்சி உறுப்பினராக நீடித்து வந்தார். இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குரு […]

Loading

செய்திகள்

காதல் விவகாரம்: சென்னையில் கார் ஏற்றி மாணவர் கொலை: தி.மு.க. பிரமுகர் பேரன் கைது

சென்னை, ஜூலை 30– சென்னையில் கார் ஏற்றி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தி.மு.க. பிரமுகரின் பேரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அயனாவரம் முத்தம்மன் தெருவை சேர்ந்தவர் நிதின்சாய் (வயது 21). சென்னையில் உள்ள கலைக்கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலத்தில் தனது நண்பர் மோகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் தனது கல்லூரி நண்பர் அபிஷேக் என்பவருடன் […]

Loading

செய்திகள்

தி.மு.க.வின் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ உறுப்பினர் சேர்க்கை: மக்களிடம் ஓடிபி பெற ஐகோர்ட் மதுரை கிளை தடை

சென்னை, ஜூலை 21– சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் நேற்றுடன் (20–ந் தேதி) முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறுஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சிக்குட்பட்ட […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் நாட்டில் தலைவிரித்து ஆடும் கிட்னி விற்பனை:

சென்னை, ஜூலை 21– தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழ்நாட்டில் கிட்னி விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– போதைப் பொருள் விற்பனை, போலி மருந்து விற்பனை, காலாவதியான மாத்திரைகள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என்ற வரிசையில் தற்போது சட்ட விரோத கிட்னி விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய […]

Loading

செய்திகள்

மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை

கடலூர், ஜூலை.13- மக்களை கடனில் தத்தளிக்க விட்டதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார் அண்ணா தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, 5-வது நாளான நேற்று, கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். கடலூரில் உழவர் சந்தை […]

Loading