தஞ்சாவூர், ஜன. 4: திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 179வது ஆராதனை விழாவினை சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பகுலபஞ்சமி தினத்தில் தியாகராஜசுவாமிக்கு ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு தியாகர […]
![]()


