செய்திகள்

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருச்சி, ஜன. 12– திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சிறுமியின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து […]

Loading

செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் 5-ந்தேதி “மோடி பொங்கல்” மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்

திருச்சி, ஜன.2-– திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசார பயணங்களை முன்னெடுத்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என்று அரசியல் கட்சிகள் தங்களை பரபரப்பு வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் […]

Loading

செய்திகள்

போலீஸ் குடியிருப்பில் கொலை; அண்ணாமலை கண்டனம்

சென்னை, நவ. 10– காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், […]

Loading

செய்திகள்

திருச்சி காவலர் குடியிருப்பில் ஒருவர் வெட்டிக் கொலை

திருச்சி, நவ. 10– திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகதில் இளைஞரை 5 பேர் கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (26). இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் […]

Loading

செய்திகள்

மக்கள் வெள்ளத்தில் விஜய்; திருச்சி நகரம் குலுங்கியது

* அலை அலையென திரண்ட தொண்டர்கள் * நத்தையாய் நகர்ந்தது பிரச்சார வேன் திருச்சி, செப் 13– திருச்சியில் இன்று 2026 தமிழக சட்ட சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கி உள்ளார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். அலை அலையென திரண்டு வந்த தொண்டர்கள், மக்கள் கூட்டத்தால் திருச்சி நகரமே குலுங்கியது. மரக்கடை பகுதியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக தொண்டர்கள் காத்திருந்தார்கள். விமான நிலைய வாசலிலிருந்து புறப்பட்ட விஜய்யின் பிரச்சார வேன் மக்கள் […]

Loading

செய்திகள்

விஜய் பிரச்சாரம்: காவலர்கள் விதித்த நிபந்தனைகள்

சென்னை, செப். 10– நடிகரும், தவெக தலைவருமான விஜய், 13–ந் தேதி முதல் தமிழகத்தில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில், திருச்சியில் தவெக பிரசாரத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகள் விதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 13–ந் தேதி சனிக்கிழமையன்று திருச்சியில் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் என 3 மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் பயணம் செய்கிறார். இதற்கான திட்ட விவரங்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி […]

Loading

செய்திகள்

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு:

திருச்சி, செப். 3– திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் அந்த விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டதால் 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவுக்கு புதன்கிழமை காலை 4.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக இயந்திரக் கோளாறை சரி […]

Loading

செய்திகள்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி, செப். 2– திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரிலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் பிற்பகல் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து மாவட்ட […]

Loading

செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில்

திருச்சி, ஆக.12– சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல்நிலையப் போலீஸாா் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே காவல்துறை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினா் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை […]

Loading

செய்திகள்

திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி: 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்

 திருச்சி, ஜூலை 27– திருச்சியில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அண்ணா தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை […]

Loading