செய்திகள்

மாணவர்கள் நலனில் அக்கறையில்லாத தி.மு.க. அரசு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: 25வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. யார் நலனிலும் அக்கறையில்லாத தி.மு.க. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டிருக்கும் போராட்டம் இன்றும் 25ம் நாளாக நீடிக்கிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து எந்தக் கவலையும் […]

Loading

செய்திகள்

மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி, ஜன. 19: உயிர்களை பாதுகாக்கவும், நிவாரணம் வழங்கவும் தேசிய பேரிடர் மீட்புப்படை அயராது பாடுபடுகிறது, சர்வதேச அளவில் மிகுந்த மரியாதையைப் பெற்றுள்ளது என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை என்பது இந்தியாவில் இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் ஒரு சிறப்புப் படையாகும், இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த படையின் நிறுவன தினத்தையொட்டி, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் 14 பேர் பலி

கராச்சி, ஜன. 19: பாகிஸ்தான் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கடைகள் தரை தளத்தில் உள்ளன. இந்நிலையில் நேற்று தினம் இரவு திடீரென இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் தரை தளத்தில் உள்ள கடைகளில் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு: வெள்ளி கிலோ ரூ.3 லட்சத்து 18 ஆயிரம்

சென்னை, ஜன. 19: சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில் அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை […]

Loading

செய்திகள்

பீகார் ராமாயண கோவிலில் 33 அடி உயர பிரமாண்ட சிவலிங்கம்

மோதிஹாரி, ஜன. 19: பீகாரில் கட்டப்பட்டு வரும் ராமாயண கோவிலுக்காக, தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட உலகின் மிகப்பெரிய 33 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கம் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முன்னிலையில் நிறுவப்பட்டது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கிழக்கு சம்பாரண் மாவட்டம் மோதிஹாரி அருகே கைத்வலியா கிராமத்தில், மகாவீர் மந்திர் அறக்கட்டளை சார்பில் பிரமாண்டமான விராட் ராமாயண கோவில் கட்டப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த […]

Loading

செய்திகள்

ஸ்பெயினில் அதிவிரைவு ரெயில்கள் மோதல்:

மலகா, ஜன. 19: ஸ்பெயினில் தடம்புரண்ட அதிவிரைவு ரெயில் மற்றொரு ரெயில் மீது மோதியதில் 21 பேர் பலியானார்கள். ஸ்பெயினின் மலகாவில் இருந்து மேட்ரிட்டுக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்த அதிவிரைவு ரெயில் அடாமுஸ் அருகே தடம்புரண்டு எதிரே வந்த மற்றொரு ரெயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 21 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தில் உள்ளூர் மக்கள் உதவியுடன் […]

Loading

செய்திகள்

கழிப்பறையில் பெண் போலீசாரை வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ. கைது

ராமநாதபுரம், ஜன. 19: முதல்வரின் பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசாரை, கழிப்பறைக்குள் மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்த எஸ்.எஸ்.ஐ, கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை, நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பாதுகாப்பு பணிக்காக வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ, முத்துப்பாண்டி (59), மணிநகர் சோதனை சாவடியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அங்கு, தஞ்சாவூரில் இருந்து வந்த பெண் போலீசாரும் […]

Loading

செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30–ந்தேதி வரை அவகாசம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி, ஜன. 19– தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படும் தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 19-ந்தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் […]

Loading

செய்திகள்

சென்னை திரும்பிய மக்கள்: ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை, ஜன. 19– பொங்கல் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோயில், ஜிஎஸ்டி சாலை எனப் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுதால் மக்கள் அவதி அடைந்தனர். தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொதுமக்கள் சிரமமின்றிச் சொந்த ஊர்களுக்குச் செல்லச் சிறப்பு […]

Loading