செய்திகள்

ரூ.61.74 கோடியில் விருதுநகரில் சாலை மேம்பாலம் : ஸ்டாலின் திறந்தார்.

சென்னை, நவ. 11– நெடுஞ்சாலைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 98 இளநிலை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட 120 பணியிடங்களுக்கு 98 இளநிலை வரைதொழில் அலுவலர், 14 உதவியாளர் மற்றும் 8 தணிக்கை உதவியாளர் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார். விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர்- அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி- […]

Loading

செய்திகள்

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் : முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கினார்

சென்னை, நவ. 11– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும். 2025-–2026–ம் ஆண்டு […]

Loading

செய்திகள்

சிலிண்டர் லாரி கவிழ்ந்து விபத்து: பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு

அரியலூர், நவ. 11– அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் சிலிண்டர்கள் ஏற்றி வந்த லாரி விபத்தில் சிக்கியதில், பலத்த சத்தத்துடன் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகேயுள்ள இன்டேன்ஸ் சிலிண்டர் கிடங்கில் இருந்து, நிரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு, அரியலூரிலுள்ள ஒரு தனியார் கேஸ் நிறுவனத்துக்கு லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை இனாம்குளத்தூரைச் சேர்ந்த கனகராஜ்(வயது35) என்பவர் ஓட்டி வந்தார். இன்று காலை இந்த […]

Loading

செய்திகள்

ஆதார் சேவைகளுக்காக 50 புதிய நிரந்தர மையங்கள்: பள்ளிகளில் பதிவுக்கு 379 முகாம்களுக்கு ஏற்பாடு

சென்னை, நவ.11– தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையின்போது மேற்கொள்ளப்படட அறிவிப்பின்படி, நேற்று (10–ந் தேதி) எல்காட் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 50 புதிய நிரந்தர ஆதார் சேவை மையங்களையும் 79 பள்ளி முகாம்களையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனங்களால் நடத்தப்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களின் மையங்களின் எண்ணிக்கை 587–ல் […]

Loading

செய்திகள்

14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் காங்கேயன் சின்னம் : உதயநிதி அறிமுகம்

சென்னை, நவ.11– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-–வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தினார். காங்கேயன் காளைகள் தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கின்றன. காங்கேயன் இன காளைகள் அவற்றின் வேகம் மற்றும் கம்பீரமான தோற்றத்திற்கு பெயர் பெற்றவை. மேலும், இந்த போட்டிக்கான வெற்றிக் கோப்பையின் தமிழ்நாடு […]

Loading

செய்திகள்

போலீஸ் குடியிருப்பில் கொலை; அண்ணாமலை கண்டனம்

சென்னை, நவ. 10– காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், […]

Loading

செய்திகள்

ரூ.223 கோடியில் 577 திட்டங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, நவ. 10– புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.202 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 43 ஆயிரத்து 993 பயனாளிகளுக்கு ரூ.341 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 […]

Loading

செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் விமான என்ஜினில் கோளாறு; கொல்கத்தாவில் அவசரமாக தரை இறக்கம்

கொல்கத்தா, நவ. 10– என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், கொல்கத்தாவில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து 188 பேருடன் மும்பையில் இருந்து நேற்று மாலை 7.10 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக விமானம் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் என்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை உணர்ந்த விமானி, […]

Loading

செய்திகள்

12,573 கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

சென்னை, நவ 10– ஒன்றிய அரசு ஒதுக்கீட்டின் படி நியாய விலைக் கடைகளுக்கு கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு முழுதும் 15–ந்தேதிக்குள் அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விடும். நடப்பாண்டு குறுவைப் பருவத்தில் வரலாற்றுச் சாதனையாக 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து 1.75 லட்சம் நெல் விவசாயிகளுக்கு ரூ 3249.38 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி […]

Loading

செய்திகள்

எச்.ஐ.வி. பாதிப்பு: 9 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

கிருஷ்ணகிரி, நவ. 10– ஒசூரில் எச்.ஐ.பி. பாதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தாய் 9 வயது மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் 40 வயதான ஒருவர் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 38 வயதில் மனைவியும், 17 வயதில் பிளஸ்-2 படிக்கும் மகளும், 9 வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் மகனும் என்று கால சக்கரம் மகிழ்ச்சியாக […]

Loading