செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை படைக்கவேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜன.22- சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எந்த ஒரு நிறுவனமும், நூற்றாண்டு நிலைத்து நிற்பது என்பது மிகப்பெரும் […]

Loading

செய்திகள்

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்த ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்

சென்னை, ஜன. 22– சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை வழங்கினார். இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இக்கல்வி ஆண்டின் (2025-–2026), மாணவர் சேர்க்கையில், புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, […]

Loading

செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்காளர் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவி செயல்முறை விளக்க மையங்கள்

சென்னை, ஜன. 22– இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியினை பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க மையங்கள் நேற்று (21–ந் தேதி) முதல் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எவ்வாறு வாக்களிப்பது மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளில் வாக்களித்த விவரங்களை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது குறித்து பொதுமக்கள் அறிந்து […]

Loading

செய்திகள்

பியூஸ் கோயலை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

சென்னை, ஜன.22- மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பாரிவேந்தருடன் சந்திப்பு பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பா.ஜ.க. தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். டி.டி.வி.தினகரனை சந்தித்த அவர், மதுராந்தகத்தில் […]

Loading

மக்கள் குரல் பார்வையில்

வந்தவாசி: ஒரு சிறிய நகரம், ஒரு பெரிய வரலாறு

வந்தவாசி தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும், காரணம். இந்திய வரலாற்றின் திசையைத் திருப்பிய ஒரு போர் நிகழ்ந்த மண் அது. 1760 ஜனவரி 22-ஆம் தேதி, வந்தவாசி அருகே பிரிட்டிஷ் படை சர் ஐயர் கூட் தலைமையில் மற்றும் பிரெஞ்சு படை கவுண்ட் டி லாலி தலைமையில் நேரடியாக மோதின. இந்த மோதல், பிரெஞ்சு ஆட்சியின் வீழ்ச்சிக்கும், பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது. இந்த வெற்றி, இந்தியாவில் […]

Loading

செய்திகள் விழாக்கள்

இந்தோ–ரஷ்ய பண்பாட்டு நட்பை கொண்டாடும் ரஷ்ய நடன விழா 2026

சென்னை, ஜன. 22: ரஷ்ய நடன விழா 2026 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 9, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. நடனத்தின் உலகளாவிய மொழி மூலம் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டமைப்புக்கிடையிலான நீடித்த பண்பாட்டு நட்பை உற்சாகமாகக் கொண்டாடும் இந்த விழா, மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதிலும், இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் உறுதிப்படுத்துவதிலும் கலைப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சென்னையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணைத் தூதரகத்தின் பண்பாட்டு […]

Loading

செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்: எடப்பாடி

சென்னை, ஜன. 21: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தீயசக்தி தி.மு.க.வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனை அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள்: ஸ்டாலின் திறந்தார்

சென்னை, ஜன. 21: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” திறந்து வைத்தார். மேலும் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக பேச்சுவார்தை நடத்தவில்லை: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஜன. 21: அ.தி.மு.க.– பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. எங்களை யாரும் அணுகவோ, தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்குள் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தமிழகம் வந்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் […]

Loading

செய்திகள்

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: மா.சுப்பிரமணியன், சேகர்பாபு வழங்கினர்

சென்னை, ஜன. 21: சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், “உலகம் உங்கள் கையில்” எனும் மாபெரும் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 1,520 பேருக்கு மடிக்கணினிகளை -மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் வழங்கினர். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய 5 மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம், […]

Loading