செய்திகள்

காஞ்சிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், டிச. 16: காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செந்தமிழ் முறையில் சிறப்பாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 41வது வார்டு ராகவேந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் கடந்த 2003ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது மிகுந்த பொருட்செலவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு கணபதி ஓமத்துடன் முதல் கால பூஜை நடைபெற்றது மேலும் காலை […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 569 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் டிச. 16: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ் சுஜாதா, தலைமையில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் /முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ். அருண் சபாபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் கஞ்சா கடத்தல் பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 16: அம்பத்தூரில் கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் உதவி ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட், கருக்கு வாகன சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். […]

Loading

செய்திகள்

கடலூரில் 157 மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் கலெக்டர் வழங்கினார்

கடலூர், டிச. 16: கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டத்தில் 157 மீனவ பயனாளிகளுக்கு தலா 2 எண்ணம் வீதம் 314 எண்ணங்கள் ரூ.7,76,208 மதிப்பீட்டிலான உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: 2023–-24ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மீன்வளம் மற்றும் மீனவர் […]

Loading

Uncategorized

தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம்

புதுடெல்லி, டிச. 15: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய அமைச்சர்கள் 3 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. இதில் பாஜகவைப் பொருத்தவரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருவதாகத் தகவல்கள் […]

Loading

செய்திகள்

சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம், டிச.15: திருவெண்ணெய்நல்லூர் அருகே சோழர் கால நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் அருகே மழையம்பட்டு கிராமத்தில் பழமைவாய்ந்த சிற்பம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பா.சரத்குமார் அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் அங்கு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நடராஜர், நந்தி மற்றும் சப்தமாதர் குழுவை சேர்ந்த சில சிற்பங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள அரச […]

Loading

சிறுகதை பாண்டிய கட்டபொம்மன்

கோயில் மணிக்காக காத்திருந்த கட்டபொம்மன்

கட்டபொம்மன் – 7 கட்டபொம்மன் அரண்மனைக்குள்ளேயே அவரது குலதெய்வமான ஜக்கமாள் கோயில் உள்ளது. ஜக்கம்மாளையும் முருகனையும் விரும்பி வணங்குவார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலை பூஜை முடிந்தவுடன் தான் கட்டபொம்மன் காலை உணவில் கை வைப்பார். காலை பூஜை முடியும் நேரத்தை அறிந்து கொள்ள மணி மண்டபம் அமைத்து இருந்தார் கட்டபொம்மன். திருச்செந்தூர் கோயில் தொடங்கி பாஞ்சாலங்குறிச்சி வரை வழிநெடுக குறிப்பிட்ட தூரத்தில் நகரா மண்டபம் அமைத்து இருந்தார். (நகரா என்பது ஒரு இசைக்கருவி) காலை பூஜை […]

Loading

செய்திகள்

234 தொகுதிகளுமே எங்கள் இலக்கு: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை, டிச. 13– கூட்டணி குறித்த அறிவிப்பு ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது. […]

Loading

செய்திகள்

இண்டிகோ விமான சேவை பாதிப்பு 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

டெல்லி, டிச. 13– இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விமான போக்குவரத்து இயக்குனரகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் புதிய விதிகளை வகுத்தது. புதிய விதிகளை அமல்படுத்த 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ அமல்படுத்தவில்லை. குறிப்பாக, குறைவான […]

Loading

செய்திகள்

கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்து வைத்தார் மெஸ்ஸி

கொல்கத்தா, டிச. 13– கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார். உலகின் மிகசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார். இன்று கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நாளை மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களை சந்திக்கிறார், 15-ஆம் தேதி […]

Loading