செய்திகள்

சென்ட்ரல் வங்கி நிறுவன தினத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் மரம் நடும் விழா நடைப்பயணத்துக்கு மண்டல தலைவர் சசிதர் ஏற்பாடு

சென்னை, டிச. 24– நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கி, அதன் 115வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. சர் சொராப்ஜி போச்கானாவாலா நிறுவிய இந்த வங்கி, தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து 115 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சென்னை மண்டல அலுவலகம் 115 மரக்கன்றுகள் நடுதல், நடைப்பயணம், தூய்மை இயக்கம், நன்கொடை முகாம் மற்றும் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வார கால நிகழ்ச்சியை […]

Loading

செய்திகள்

வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 மகளிருக்கு வஸ்தர தானம்

வேலூர், டிச. 24– வேலூர் நாயாயணி பீடம் மற்றும் தங்க கோயிலை நிறுவிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10,008 மகளிருக்கு வஸ்தர தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சக்தி அம்மா பங்கேற்று அனைத்து மகளிரையும் ஆசீர்வதித்து புடவைகளையும் வழங்கினார். கலவை சச்சுதாநந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து அவரைக் கவுரவித்தார். நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி, தங்கக் கோயில் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீ நாராயணி ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் செவிலியர் கல்லூரி விளக்கேற்றும் விழா

வேலூர், டிச. 24– வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் விளக்கேற்றும் விழா இயக்குனர் என்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ரோகிணி தேவி, நடிகரும் வசனகர்த்தாவுமான மிர்ச்சி சிவா இணைந்து விளக்கேற்றி தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள். நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சி. நாராயணி நர்சிங் கல்லூரியின் 20 ஆம் ஆண்டிலும், டிப்ளமோ நர்சிங் கல்லூரியின் 18 ஆம் ஆண்டிலும் […]

Loading

செய்திகள்

டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் எடுத்து இளம் வீரர் விஹான் அபாரம்

திருவள்ளூர், டிச.24: திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 12 வயதுக்குட்டுப் பட்டவர்களுக்கான டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி பட்டாமிராமி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேந்திர நாயுடு தொடங்கி வைத்தார். முதல் நாளில் 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வேலூர் அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. எஸ். மிதுன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் […]

Loading

செய்திகள்

எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச.24-– ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய […]

Loading

செய்திகள்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ராகவேந்திரா கோவிலை சுத்தப்படுத்திய 72 தன்னார்வலர்கள்

சென்னை, டிச.24– சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா கோவிலில், கோபாலபுரத்தில் உள்ள ஒய்ஏசிடி அறக்கட்டளையுடன் இணைந்து, கோவில் சுத்தம் செய்வதற்கான பரமம் பவித்ரம் – 65வது திட்டத்தை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரித்துள்ளது. குரு ராகவேந்திரரின் தெய்வீக ஆசீர்வாதங்களுடன் 72 தன்னார்வலர்கள் கொண்ட எங்கள் குழு, கோவில் அதன் அனைத்து மகிமையிலும் பிரகாசிப்பதை உறுதி செய்ய அயராது உழைத்து, 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் வெள்ளிப் பாத்திரங்கள், தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2வது தளம் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம் டிச. 24– காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி வி.சோமசுந்தரம் தலைமையில் பல்வேறு பகுதியில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பகுதிக்கு உட்பட்ட களக்காட்டூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் , ஓரிக்கை பகுதியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி ஜீவானந்தம் முன்னிலையில் பகுதி செயலாளர் கோல்டு எம். ரவி , […]

Loading

செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி கண்காட்சி ராணிப்பேட்டை கலெக்டர் துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை, டிச. 24– ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நிதி ஆயோக் அமைப்பின் சக்தி சங்கமம் சார்பில் திமிரி வட்டாரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியான கல்லூரி சந்தை நிகழ்ச்சியை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: மகளிர் சுய உதவிக்குழுக்கள் அரசின் மூலம் வங்கிக்கடனுதவி […]

Loading

செய்திகள்

63 பேருக்கு ரூ.2.53 கோடி வங்கி கடன் கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், டிச. 24– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தொழில் மையம், கடலூர், முன்னோடி வங்கி மற்றும் இதர வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் தொழிற் கடன் வழங்கும் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 63 நபர்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் மாவட்டத் தொழில் மையம் மற்றும் […]

Loading

செய்திகள்

6வது நாளாக தொடர் போராட்டம்: செவிலியர்கள் கைது

சென்னை, டிச. 23– 6 வது நாளாக கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறை கைது செய்தது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் தங்களது துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் 18 ஆம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருடன் அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்த வித முன்னேற்றமும் இன்றி தோல்வியில் முடிந்தது. அதைத் […]

Loading