செய்திகள்

2026ல் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது கோவையில் செங்கோட்டையன் பேட்டி

கோவை, டிச. 25– 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் […]

Loading

செய்திகள்

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

புதுடெல்லி, டிச. 25– டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அங்கு மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் கோர விபத்து: தனியார் பஸ்–கன்டெய்னர் லாரி மோதியதில் 20 பேர் உடல் கருகி பலி

சித்ரதுர்கா, டிச.25– கர்நாடகம் மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். கர்நாடகம் மாநிலம், பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ் ஒன்று, 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் அதிவேகத்தில் வந்த கன்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]

Loading

செய்திகள்

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஓ.டி.பி. கட்டாயம்: முதற்கட்டமாக 5 ரெயில்களுக்கு நடைமுறை

சென்னை, டிச. 25– தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஓ.டி.பி. சரிபார்ப்புக்கு பின் டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி கொண்டுவரப்பட்டு உள்ளதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. நீண்டதூர பயணத்தை மேற்கொள்ளும் நபர்களின் முதல் தேர்வாக ரெயில் சேவை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் பயணிப்போர் அதிகளவில் ரெயில்களிலேயே பயணிக்கின்றனர். ரெயில்களில் பயணம் செய்வோரில் 85 சதவீதம் பேர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து, […]

Loading

செய்திகள்

99 பயணளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்

காஞ்சிபுரம் டிச.24 உத்திரமேரூர் அரும்புலியூர் ஊராட்சி கரும்பாக்கத்தில் 99 பயனாளிகளுக்கு ரூ.92.86 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ஆகியோர் வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் நிலமற்ற 16826 பயனாளிகளுக்கு 285.13 கோடி மதிப்பீட்டிலும் அரசு நிலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. 2021 – 2025 ஐந்தாண்டில் மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30644 பயனாலிகளுக்கு 413.62 கோடி மதிப்பீட்டில் அரசு நிலத்தில் இலவச வீட்டுமை பட்டா […]

Loading

செய்திகள்

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் டயர் வெடித்து 2 கார்கள் மீது மோதி விபத்து: 9 பேர் பலி

சென்னை, டிச. 25– கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, எழுத்தூர் கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சியில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் கடலூர் மாவட்டம் மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த […]

Loading

செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

விழுப்புரம், டிச.25- விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ருவண்ணாமலையில் ஆய்வுப்பணியை முடித்து விட்டு மாலையில் தனி ஆய்வு ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன் […]

Loading

செய்திகள்

சத்துவாச்சாரி ஆவின் பாலகத்தில் புதிய குல்பி ஐஸ்கீரிம் விற்பனை: கலெக்டர் சுப்புலெட்சுமி துவக்கி வைத்தார்

வேலூர், டிச. 25– வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் மைய பாலகத்தில் 40 மி.லி அளவு கொண்ட புதிய குல்பி ஐஸ்கீரிம் விற்பனையை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே 25 மி.லி மற்றும் 70 மி.லி அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்விரண்டு வகைகளிலும் நாளொன்றுக்கு 4000 எண்ணிக்கையிலான குல்பி ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவின் குல்பி ஐஸ்கீரிம் வகைகளுக்கு சந்தையில் […]

Loading

செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சென்னையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, டிச. 24– கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பிற்க்காகவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், இன்று இரவு முதல் நாளை வரை, சென்னை பெருநகர […]

Loading

செய்திகள்

விண்ணில் பாய்ந்தது ‘இஸ்ரோ’வின் ‘பாகுபலி எல்விஎம்–3 எம்6 ராக்கெட்’

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 24– அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) பாகுபலி ராக்கெட் இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என ‘இஸ்ரோ’ தெரிவித்தது. ‘இஸ்ரோ’ வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்–6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்–3 எம்6 ராக்கெட் மூலம் செலுத்த முடிவு […]

Loading