செய்திகள்

பாரதி கனவை நனவாக்குபவர் பிரதமர் மோடி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 3: பாரதியின் கனவை நனவாக்கு பவராக மோடி செயல்படுகிறார் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் உலகளவில் முதல் இடத்தை இந்தியா எட்டும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே தலைமை தாங்கினார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவில், துணை […]

Loading

செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், நல்ல முடிவு எடுப்போம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, ஜன. 3: இடைநிலை ஆசிரியர்களை கைவிடமாட்டோம், அவர்கள் பொறுமையாக இருந்தால் நல்ல முடிவு எடுப்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். சென்னை நந்தனத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்த கேள்விகளை சரமாரி கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:- போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் நானும், அதிகாரிகளும் கடந்த 7 நாட்களாக […]

Loading

செய்திகள்

அரசுப்பள்ளிகளில் தினமும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம் ராஜஸ்தான் அரசு உத்தரவு

ஜெயப்பூர், ஜன. 3: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தினசரி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்ற நடைமுறையை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு […]

Loading

Uncategorized செய்திகள்

அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 3: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அண்ணா தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி பிரபாகர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜே.சி.டி. பிரபாகர். இவர் 1980, 2011-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆனார். அதிலும் 2011-ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் மறைந்த பேராசிரியர் அன்பழகனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அண்ணா தி.மு.க.வில் அமைப்பு செயலாளராகவும், […]

Loading

செய்திகள்

`பாரத் 2026′ தமிழ் பதிப்பு காலண்டர் மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டர்

சென்னை, ஜன. 3: மத்திய அரசு சார்பில் `பாரத் 2026′ தமிழ் பதிப்பு காலாண்டரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டர். மத்திய அரசின் முக்கிய திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கி ‘பாரத் 2026′ என்ற பெயரில் மத்திய அரசு சார்பில் காலாண்டர் தயாரித்து வெளியிடப்பட்டது. இந்த காலண்டரின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு ‘பாரத் […]

Loading

செய்திகள்

40 விவசாயிகளுக்கு புல்நறுக்கும் கருவி: அமைச்சர் காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை, ஜன. 3: ராணிப்பேட்டை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தலா ரூ.25,936 மதிப்பீட்டிலான புல்நறுக்கும் கருவிகளை அரசின் 50 சதவீதம் மானியம் ரூ.12,96 வீதம் 40 பயனாளிகளுக்கு ரூ.5.18 இலட்சம் மதிப்பீட்டில் புல்நறுக்கும் கருவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். இந்த புல்நறுக்கும் கருவிகள் மூலம் புல், சோளம், கரும்புச் சக்கை போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு (மாடுகள், ஆடுகள், கோழிகள்) உணவாக அளிக்கலாம். சிறிய துண்டுகளாக வெட்டும்போது, விலங்குகளுக்கு தீவனத்தை ஜீரணிக்க […]

Loading

செய்திகள்

அரசு கலை கல்லூரி கட்டுவதற்கான புதிய இடம்: அமைச்சர் கோ.வி. செழியன் ஆய்வு

வேலூர், ஜன. 3: கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது என அமைச்சர் கோ.வி.செழியன் கூறினார். முதலமைச்சர் அறிவித்த கீ.வ.குப்பம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரைவில் கல்லூரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. கல்லூரி கட்டுவதற்கான புதிய இடத்தினை வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பத்தில் உயர்க்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பார்வையிட்டு […]

Loading

செய்திகள்

தியாகி பார்த்தசாரதி பிறந்தநாள் விழாவில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை,டிச. 3: தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் நல கூட்டமைப்பு சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மறைந்த தியாகி டி.பார்த்தசாரதி பிறந்தநாள் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஞானவேல் வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சேம நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு 100 […]

Loading

செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் 2025ம் ஆண்டில் 11.19 கோடி பேர் பயணம்

சென்னை, ஜன. 3: சென்னை மெட்ரோ ரெயிலில் 2025 ம் ஆண்டில் மட்டும் 11.19 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2025 வரை 46.73 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட […]

Loading

செய்திகள்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது: தென்காசியில் – 23 செ.மீ. மழை

சென்னை, ஜன. 2- கடலில் வருகின்ற ஜனவரி 6ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் ஜனவரி 2வது வாரத்தில் கனமழை பெய்ய கணிக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளதாக தமிழகத்தில் பருவமழையானது வடகிழக்கு வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். இந்தாண்டு டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், இயல்பைவிட 3 குறைவாகவே வடகிழக்கு […]

Loading