செய்திகள்

பொங்கல் விடுமுறை: மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கம்

சென்னை, ஜன. 14– பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும்.மெட்ரோ ரெயில் சேவை விவரங்கள்: சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம்போல காலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி […]

Loading

செய்திகள்

கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து வரத்து அதிகரித்தது கோயம்பேட்டில் பொங்கல் விற்பனை களைகட்டியது

சென்னை, ஜன. 14– கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள பொங்கல் சிறப்பு சந்தையில் விற்பனை களைகட்டியுள்ளதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாடு உட்பட உலகம் முழுக்க உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நாளை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு தேவையான கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, வெல்லம் உள்ளிட்ட பொருள்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு வசதியாக ஆண்டுதோறும் கோயம்பேடு சந்தையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிறப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் […]

Loading

செய்திகள்

டெல்லியில் அமைச்சர் முருகன் இல்லத்தில் பொங்கல் விழா: மோடி பங்கேற்பு

புதுடெல்லி, ஜன.14– டெல்லியல் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று நடந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார். பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக மாறியுள்ளது என நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழகத்தில் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை நினைவுபடுத்தும் வகையில் […]

Loading

செய்திகள்

பொங்கல் விடுமுறை: சிறப்புப் பஸ்களில் 6.90 லட்சம் பேர் பயணம்

சென்னை, ஜன. 14– பொங்கல் திருநாளை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 6.90 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன..இதன்படி, ஜன. 9 ஆம் தேதி முதல் ஜன. 13–ம் தேதி வரை நள்ளிரவு நேரம் வரை, மொத்தம் 15,762 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 6.90 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். […]

Loading

செய்திகள்

விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம், ஜன.14- விழுப்புரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த 3 கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு சிறுவாக்கூர் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த கொற்றவை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:- பழந்தமிழர்களின் தாய் தெய்வமாக விளங்கியவள் கொற்றவை தெய்வம். தொடக்கத்தில் காட்டில் உறைபவள் எனும் பொருளில் காடமர் செல்வி என வழங்கப்பட்டவள் பின்னர் போரில் வெற்றியை அளிக்கும் தெய்வமாக கொற்றவை என வணங்கப்பட்டாள். கொற்றவையின் உருவ […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கொண்டாட்டம்

சென்னை, ஜன. 14– “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடப்படுகிறது. வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும் என்பதே அதன் ஐதீகம். பொங்கல் திருநாளின் முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று போகி பண்டிகையை […]

Loading

செய்திகள்

எல்.முருகன் இல்லத்தில் நாளை பொங்கல் விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி, ஜன. 13– டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (14–ந்தேதி) நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை (14–ந்தேதி) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாட உள்ளார். இல்லத்தில் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை திருப்பூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவரம்

திருப்பூர், ஜன. 13– துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் அவர், நாளை மாலை காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் மதியம் 2 மணி […]

Loading

செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேர விசாரணை நிறைவடைந்தது: சென்னை திரும்பினார் விஜய்

புதுடெல்லி, ஜன. 13– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் 7 மணி நேர விசாரணை முடிந்த நிலையில் அவர் புதுடெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். மீண்டும் 19–ந் தேதி ஆஜராக சம்மன் சிபிஐ சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் கரூருக்கு சென்றார். அங்கு பிரச்சார பஸ்சில் நின்று பேசினார். அப்போது […]

Loading

செய்திகள்

வரலாறு காணாத உச்சம் தங்கம் சவரன் – ரூ.1,05,360: வெள்ளி கிலோ ரூ.2.92 லட்சம்

சென்னை, ஜன. 13– தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.12 ஆயிரத்து 900-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று ரூ.220 உயர்ந்து கிராம் ரூ.13 ஆயிரத்து 120-க்கும், சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 960-க்கும் விற்பனை […]

Loading