செய்திகள்

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

சென்னை, செப்.7– முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன். அவருக்கு […]

Loading

செய்திகள்

செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து திடீர் விடுவிப்பு

திண்டுக்கல் , செப். 6: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசை வேரோடு சாய்ப்போம்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

திருநெல்வேலி, ஆக.23-– ”சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார். தமிழக பா.ஜ.க. கட்சியின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, […]

Loading

செய்திகள்

மதுரையில் அலைஅலையென திரண்ட தொண்டர்கள் ‘ஜனநாயகன்’ விஜய்: இளைஞர்கள் குதூகலம்

மதுரை, ஆக. 21– த.வெ.க. மாநாட்டிற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை மாநகரமே தொண்டர்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. 2026 சட்டமன்ற […]

Loading

செய்திகள்

ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

சென்னை, ஆக. 5– ராமதாசின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்பு கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் […]

Loading

செய்திகள்

த.வெ.க கொடி நிறம் தொடர்பான வழக்கு: விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜூலை 17– த.வெ.க கொடி நிறம் தொடர்பான மனுவுக்கு பதிலளிக்க த.வெ.க. தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது. த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி […]

Loading