சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட பாதரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை போர்த்தி கெளரவித்தார். மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், தவெக நிர்வாகிகள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. முன்னதாக […]
![]()


