சென்னை, ஆக. 15– சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுகளை வழங்கினார். தமிழகத்திற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் வகையில் 2025ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார். பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர் என்ற […]
![]()


