செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தல்: ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு அவர் […]

Loading

டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
செய்திகள்

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஆக. 18– டெல்லியில் உள்ள 2 பள்ளிகள் மற்றும் துவாராகாவில் உள்ள ஒரு கல்லூரிக்கு இன்று காலையில் ’தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி வளாகத்திலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடயவியல் நிபுணர்களுடன் மிரட்டல் வந்த பள்ளி, கல்லூரிக்கு […]

Loading

செய்திகள்

டெல்லியில் தேர்தல் ஆணையத்துக்குப் பேரணி ; ராகுல், பிரியங்கா கைது

புதுடெல்லி, ஆக. 11– காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார். பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் […]

Loading

செய்திகள்

டெல்லியில் கனமழை; 100 விமானங்கள் தாமதம், ரெட் அலர்ட் அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 9– டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டெல்லியில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரக்‌ஷா பந்தன் பண்டிகையான இன்று அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டிய மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் […]

Loading

செய்திகள்

டெல்லி, பெங்களூருவில் 85 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஜூலை 18– பெங்களூருவில் 40 பள்ளிகளுக்கும், புதுடெல்லியில் 45 பள்ளிகளுக்கும் (மொத்தம் 85 பள்ளிகள்) மர்ம நபர்கள் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களாக புதுடெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இன்று 45 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை […]

Loading

செய்திகள்

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

இடிபாடுகளில் 12 பேர் சிக்கித் தவிப்பு புதுடெல்லி, ஜூலை 12– டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று காலை 4 தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சீலாம்பூர். இந்த பகுதியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் அமைந்துள்ள 4 தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை 7 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜூலை.12- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் அநியாயம் செய்யப்படுகிறது. அதனால் தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள்தொகை தினமான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது, பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து […]

Loading