செய்திகள்

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

புதுடெல்லி, டிச. 25– டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அங்கு மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று […]

Loading

செய்திகள்

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின் செயலிழப்பு டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்

புதுடில்லி, டிச. 22– ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணிக்கு ஏர் இந்தியா விமானம், மும்பைக்கு புறப்பட்டு சென்றது. வானத்தில் பறந்த சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதாவது, இரு என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்து விட்டது. இதனால், விமானத்தை மீண்டும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு , அமீர் அலிக்கு 10 நாள் என்.ஐ.ஏ. காவல்

புதுடெல்லி, நவ. 17: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் அமீர் அலி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 10 நாள் என்.ஐ.ஏ. காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10ந்தேதி மாலை 6.52 மணியளவில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தேசிய […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுப்போம்: டெல்லியில் ஆதவ் அர்ஜுனா பேட்டி

புதுடெல்லி, அக். 13– த.வெ.க. மாவட்டச் செயலாளர்களை கைது செய்து கட்சியை முடக்க தி.மு.க. முயற்சிக்கிறது என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் 7-–ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா […]

Loading

செய்திகள்

பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார்: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

புதுடெல்லி, செப். 30– பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய்குமார் மல்ஹோத்ரா காலமானார். அவருக்கு வயது 94. அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜய்குமார் மல்ஹோத்ரா சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை உயிரிழந்தார். டெல்லியில் உள்ள ராக்பஞ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மல்ஹோத்ரா உடலுக்கு […]

Loading

செய்திகள்

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்

புதுடெல்லி, செப். 11– தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. செங்கோட்டையன், ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து […]

Loading

செய்திகள்

டெல்லியில் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்க தடை: பிடித்த இடத்திலேயே விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க உத்தரவு புதுடெல்லி, ஆக. 22– தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், பிடித்த நாய்களை மீண்டும் அதே இடத்தில் விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் தெருநாய்கள் தொடர்பான வழக்குகளில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். புதுடெல்லியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நாய்க்கடியால் ‘ரேபிஸ்’ என்ற நோய் பரவி வருவதாக பத்திரிகைகளில் […]

Loading

செய்திகள்

தாக்குதல் எதிரொலி டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, ஆக. 21– டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நேற்று காலை முதலமைச்சர் ரேகா குப்தாவின் வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டமான ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முதல்வர் ரேகா குப்தாவை தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதற்கு […]

Loading

செய்திகள்

மக்கள் குறைதீர் முகாமில் பரபரப்பு: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்

புதுடெல்லி, ஆக. 20– டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்க வந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைத்தது பா.ஜ.க. முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார். அவர் முதல்வராக பதவியேற்றப் பின்னர் தனது இல்லத்தில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். […]

Loading

செய்திகள்

புதுடெல்லியில் இன்று 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி, ஆக. 20– தலைநகர் புதுடெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. டெல்லியின் பிரபல பள்ளிகளான டிஏவி பப்ளிக் பள்ளி, ஃபெய்த் அகாடமி, டூன் பப்ளிக் பள்ளி, சர்வோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Terrorizers 111 என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த நபர், 25,000 அமெரிக்க […]

Loading