திருவள்ளூர், செப். 21– திருவள்ளூர் அருகே மின்சாரத்தை துண்டித்து ‘டிரான்ஸ் பார்மரை’ திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை அடுத்த குன்னவளம் கிராமத்தில் உள்ள வயல்வெளி அருகே மின்கம்பத்தில் டிரான்ஸ் பார்மர் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் மின் இணைப்பு துண்டித்து மின்கம்பத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரை தனியாக கழற்றி திருடி சென்றனர். சிறிது தூரத்தில் டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதியை வீசிவிட்டு அதில் இருந்த செம்புகம்பிகள் அனைத்தையும் தூக்கி சென்று விட்டனர். இன்று […]
![]()


